ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று(27-08-2015) கிளிநொச்சிக்கு விஜயம் செய்து சில கிராமங்களுக்கு சென்று மக்களின் நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
இன்று காலை ஒன்பது மணிக்கு உழங்கு வானூர்தி மூலம் கிளிநொச்சிக்கு சென்ற ஜரோப்பிய மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் மேலதிக செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவினரை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம அருமைநாயகம்; வரவேற்று கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் மற்றும் புண்ணைநீராவி பிரதேசங்களுக்கு அமைத்துச் சென்று மக்களின் நிலைமைகளை நேரில் காண்பித்துள்ளார்.
மேற்படி கிராமங்களில் மக்கள் மீள்குடியேற்ற காலம் தொட்டு இன்று வரை ஆறுவருடங்களாக நிரந்தர வீடுகள் இன்றி பெரும் இடர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடன் மேற்படி குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.
அத்தோடு கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராமத்திற்கு சென்றவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒரு பயனாளியின் இந்திய வீட்டுத்திட்டத்தையும் பார்வையிட்டுள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திற்கு புதிதாக வீட்டுத்திட்டங்களை வழங்கும் நோக்குடன் இந்த குழுவினர் தங்களின் பயணத்தை மேற்கொண்டதாகவும் விரைவில் மாவட்டத்திற்கு புதிதாக வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெறும் எனவும் மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.
குறித்த விஜயத்தில் கலந்துகொண்ட மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை அவர்களிடம் பயணத்தின் நோக்கம் பற்றி கருத்துகேட்;ட போது ஊடகங்களுக்கு தான் எவ்வித கருத்தையும் தெரிவிக்க போவதில்லை மறுத்துவிட்டார்.
No comments:
Post a Comment