கிழக்கில் மூவினமக்களும் இணைந்த நல்லாட்சி நடப்பதாகக்கூறிக்கொண்டு தமிழ்மக்களும் அவர்களது கல்வியும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை இன்னமும் வெறுமனே வாய்மூடி மௌனியாக பார்த்துக்கொண்டிருக்கமு டி
யாது என தமிழ்த்தேசியக்கூட்டமைப்
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடந்த வாரம் 321800 அமெரிக்க டொலர் அபிவிருத்தி நிதியுதவியில் கிழக்கில் 08 பாடசாலைகளை அபிவிருத்திசெய்ய தெரிவுசெய்யப்பட்டதாகவு ம் அதில் ஒரேயொரு தமிழ்ப்பாடசாலையே தெரிவுசெய்யப்பட்டுள்ளதா கவும் அறிந்து ஆத்திரமடைந்தேன்.
முதலமைச்சரின் ஏற்பாட்டில் நடைபெற்றதாகக்கூறப்படும் இத்தெரிவு மீள்பரீசீலனைக்குட்படு த்தப்படவேண்டும். இந்தத்தெரிவின் பின்னாலுள்ள அதிகாரி இனங்காணப்பட்டு அப்புறப்படுத்தப்படவேண் டும்.
இவ்வாறான துவேச உணர்வுகொண்ட அதிகாரிகளால்தான் மாணவர் மத்தியில்கூட இனமுரண்பாடு உருவாகின்றது. இன, உறவை சமாதானத்தை வளர்க்கவேண்டிய கல்வித்துறை இவ்விதம் பாரபட்சமான உணர்வுடன் நடந்துகொள்வதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.
போரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் உள்ளன.அவற்றை அபிவிருத்தி செய்ய இந்த திட்டத்தை முதலமைச்சர் பயன்படுத்தியிருக்கலாம். எதுவாகவிருந்தாலும் நல்லாட்சி கூட்டாட்சி என்றுகொண்டு இந்த பச்சையான பாரபட்சத்தை பட்டப்பகலில் நடத்தியிருப்பதுகண்டு வேதனையடைகின்றேன்.
முன்னைய முதலமைச்சரின்கீழ் பதவிநியமனத்தில் தமிழ்மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு நீதிமன்றில் வழக்கு விசாரணையிலிருக்கும் தருணத்தில் இன்றைய முதலமைச்சரின் கீழ் இத்தகையதொரு அநீதி இடம்பெற்றிருப்பது சகித்துக்கொள்ளமுடியாது ள்ளது.
கிழக்குமாகாணத்தில் தமிழர்கள் அதிகமாகவும் தமிழ்ப்பாடசாலைகள் அதிகமாகவும் உள்ளநிலையில்
8 பாடசாலைகள் மாத்திரம் இவ்அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டதென்ற செய்தி கல்விக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு காலடிஎடுத்துவைத்த எனக்கு மிகவும் வேதனையாகவும் வெறுப்பாகவும் அருவருப்பாகவுமிருந்தது .
அதுவும் தமிழர் ஒருவர் கல்வியமைச்சராக இருக்கத்தக்கதாக இந்த அநீதி புறக்கணிப்பு பாரபட்சம் இடம்பெற்றுள்ளது. இதில் கவலை என்னவென்றால் அந்த இடத்தில் நீதியானவர் நியாயமானவர் என்று சொல்லப்படும் முதலமைச்சரும் இருந்துள்ளார். இச்செய்திகேட்டவுடன் கல்வியமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசினேன்.
எந்த நழுவல்போக்கிற்கும் இனி இடமில்லை. அதனை உடனடியாக நிறுத்தி நீதியாக இனவிகிதாசாரப்படி எந்த இனத்திற்கும் பாரபட்சம் காட்டாமல் நிதியைஒதுக்கி அபிவிருத்தியைசெய்யுங்கள் . முடியாவிட்டால் வெளியேறுங்கள். மாகாணசபையில் கூட்டாட்சி நடத்துவதில் அர்த்தமில்லை என்று தெரிவித்துள்ளேன்.
அதேவேளை குறிப்பிட்ட அமெரிக்க நிறுவனத்திற்கும் அறிவிக்கவுள்ளதுடன் அமெரிக்க தூதுவராலயத்திற்கும் அறிவிக்கவிருக்கின்றேன். இந்தப்பாரபட்சம் காட்டிய அதிகாரி யாராக இருந்தாலும் அவரை இத்தகைய தெரிவுசெய்யும் பணியிலிருந்து விலக்கிவைக்குமாறு கேட்டுள்ளேன்.
கிழக்குமாகாண கல்விப்புலத்தில் 3லட்சத்து 8ஆயிரத்து 203 தமிழ்மொழிமூல மாணவர்களும் 16ஆயிரத்து 183 தமிழ்மொழிமூல ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களில் கணிசமானவர்கள் தமிழ்மாணவர்கள். ஆசிரியர்கள். தமிழ்ப்பாடசாலைகளே அதிகமுள்ளன.
அதேவேளை, 77ஆயிரத்து 57 சிங்கள மொழிமூல மாணவர்களும் 4ஆயிரத்து 457 சிங்களமொழிமூல ஆசிரியர்களும் உள்ளனர்.கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களுள் 12 தமிழ்மொழிமூல கல்விவலயங்களாகும். மீதி 05 வலயங்கள் சிங்கள மொழிமூல வலயங்களாகும். எனவே, எந்த இனமும் பாதிக்கப்படாவண்ணம்நீதியாக நடந்து கொள்ளவேண்டுமென்பதே எனது வேண்டுகோளாகும்.
No comments:
Post a Comment