வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக சுமார் 60,000 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, பொலன்னறுவை, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் வரட்சியான காலநிலையால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அந்த நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். இதனையடுத்து, பல பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவுகள் மற்றும் நிவாரண சேவைப் பிரிவுகள் என்பன இடர் முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வரட்சி நிலை அதிகரித்து வருகின்ற பிரதேசங்களுக்கு நீரை விநியோகிப்பதற்கான விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை திட்டமிட்டுள்ளது.
மொனராகலை, அம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, குருணாகல் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும், மஹியங்கனை பிரதேசத்திலும் எதிர்வரும் சில மாதங்களில் வரட்சி ஏற் படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது வரட்சி யினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்களுக்கு நீரை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன் னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் இரண்டு இலட்சம் லீற்றர் வரையான நீரை பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களுக்கு விநியோகிப்ப தற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment