யாழ்ப்பாணம் முல்லைத்தீவில் அகால மரணமடைந்த போராளியின் குடும்பத்துக்கு லண்டனில் இயங்கும் தமிழர் கராத்தே கல்லூரியின் நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
சீ.யோகேஸ்வரனால் ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியநாதன் பிரான்ஸிஸ் என்பவர் தலைப் பகுதியில் ஏற்பட்டிருந்த கட்டிக்கு கிசிச்சை எடுத்திருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை பெற போதிய பண வசதி இல்லாமையாலும், மிகவும் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்திருந்தார்.
இச்செய்தியை கேள்வியுற்ற லண்டனில் ரென்சி ரவீந்திரனின் கீழ் இயங்கும் தமிழர் கராத்தே கல்லூரியின் கறுப்பு பட்டி பட்டம் பெறும் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தினை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீ.யோகேஸ்வனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்பணத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பெற்றுக் கொண்டு நேரடியாக மரணமடைந்தவரின் வீட்டுக்கு சென்று அவருடை மனைவியிடம் பணத்தினை வழங்கி ஆறுதல் வார்த்தைகளையும் தெரிவித்தார்.
இவ்உதவியை வழங்கிய லண்டனில் இயங்கும் தமிழர் கராத்தே கல்லூரியினருக்கும், பாராளுமன்ற உறுப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக மரணமடைந்தவரின் மனைவி தெரிவித்தார்.
No comments:
Post a Comment