
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரனைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் விசாரணையின் போது சாட்சியமளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
என்னிடம் மற்றும் எனது கணவரிடமும் எனது மகனைப் பற்றி அடிக்கடி விசாரித்து வந்தனர் குறித்த தினம் மணியன் என்பவரும் மற்றைய இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்து எங்களை தள்ளிவிட்டு மதிய உணவு உட்;கொண்டிருந்த போது அழைத்து சென்றனர். அவர்களிடம் கெஞ்சிக் கேட்டும் விடாமல் அழைத்து சென்றனர்.
மறுநாள் வந்தாறுமூலையில் இருந்த அவர்களது அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது மகனை வேறு இடத்திற்கு அனுப்பி விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பல இடங்களில் தேடியும் பலன் கிடைக்கவில்லை. மட்டக்களப்பில் உள்ள மனித உரிமை அமைப்பிடம் சென்று மகனின் விடயம் தொடர்பாக முறையிட்டு ஒரு கடிதம் பெற்று மணியம் என்பவரிடம் கையளித்தோம். அதனை; பார்வையிட்டு விட்டு எங்கள் கண் முன்னே கிழித்து எறிந்தார்.
No comments:
Post a Comment