வெள்ளை வேனில் கடத்திச் செல்லும் அளவிற்கு எங்கள் பிள்ளைகள் செய்த தவறு என்னவென, கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி முதல் காணாமல்போகச் செய்யப்பட்டுள்ள பத்மநாதன் பிரதீபனின் தாயார்
பத்மநாதன் நவமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி பேலியகொடயில் வைத்து இரவு 8.45 அளவில் வெள்ளைவானில் தனத மகன் கடத்தப்பட்டதாக பிரதீபனின் நண்பன் தெரிவித்ததாக பத்மநாதன் நவமணி தெரிவித்துள்ளார்.
தனது மகனை காணவில்லை என சிறீலங்கா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்தபோது உங்களுடைய மகன் வெளிநாடு சென்றுள்ளதாக அவர் பதலளித்ததாகவும், மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தாது தனது மகன் ஏன் வெளிநாடு செல்ல வேண்டும் எனவும், ஒரு நாட்டின் ஜனாதிபதி சொல்லும் பதிலா? இதுவெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது பிள்ளைக்கு பதிலாக தனக்கு ஒரு இலட்ச ரூபா பணமும் மரண சான்றிதழும் வழங்கப்பட்டதாகவும் இந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment