August 20, 2015

யாழ் தேர்தல் தொகுதியில் நடந்த சுவாரசிய சில சம்பவங்கள்!

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் நிகழ்ந்த கவனிக்கத்தக்க சில சம்பவங்கள் நடந்தேறின. அவற்றில் சில பின்வருமாறு,

ms aஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னிலைப்படுத்தி வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக இளைஞர், யுவதிகள் மூலம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தோல்வியடைந்தார்.
கிளிநொச்சியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் முருகேசு சந்திரகுமாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிவஞானம் சிறிதரனே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றார்.cv_sere
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (18) மாலை இடம்பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணும் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போது, ஊடகவியலாளர்கள், கட்சிகளின் கண்காணிப்பாளர்கள் எவரும் அருகில் அனுமதிக்கப்படாமல் இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் பணி இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த 5 ஆசனங்களில் 5ஆவது ஆசனம், கந்தையா அருந்தவபாலன் என்பவருக்கு கிடைத்துள்ளது என முன்னர் தகவல் பரவியிருந்த நிலையில், அடுத்த சில மணித்தியாலங்களில் இரண்டாவது தடவையாக விருப்பு வாக்கு எண்ணப்பட்டு ஈஸ்வரபாதம் சரவணபவன் அந்த ஆசனத்தைப் பெற்றார்.arunthavabalan
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, 1994, 2000, 2001, 2004, 2010, 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 6 பொதுத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று 6ஆவது முறையாக நாடாளுமன்றம் செல்கின்றார்.epdp

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறும் 6 வாக்குகளால் ஒரு ஆசனத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாரைவார்க்க நேர்ந்தது.tna 001
சர்வதேச விசாரணை வேண்டும் என்பது தொடர்பில் அதிகம் விரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவு செய்யப்படவில்லை.IMG_9101-972x623
விடுதலைப் புலிகளின் மீள்பிரவேச கட்சி என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் தேர்தல் பிரசாரம் செய்யப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி, வெறும் 1979 வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.tna-ex-ltte-meet
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குருநாகல் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் சுயேட்சைக்குழு அங்கு 91 வாக்குகளை மாத்திரமே பெற்றது.Sivaji-lingam
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி 723 வாக்குகளையும், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட அக்கட்சி 1,515 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தது.sangare

No comments:

Post a Comment