August 20, 2015

இரா.சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி ?

இலங்கையின் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தில் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி கிடைக்­க­லா­மென அர­சியல் வட்­டா­ரங்களிலிருந்து செய்தகள் வெளியாகியுள்ளன.

பிர­தமர் பத­வி­யேற்­க­வுள்ள ரணில் விக்­கிர­ம­சிங்க நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் தேசிய அர­சாங்கம் ஒன்று அமை­ய­வுள்­ளமை தொடர்பில் குறிப்­பிட்­டி­ருந்தார். இதே­வேளை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் புதிய அர­சாங்­கத்­துடன்
இணைந்து செயற்­ப­டு­வார்­க­ளெ­னவும் அதில் நிமல் சிறி­பால டி சில்­வா­விற்கு பிரதி பிர­தமர் பதவி வழங்­கப்­ப­டு­மெ­னவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
இந்­நி­லையில் ஐ.தே.க வும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து புதிய அர­சாங்­கத்தை அமைக்­கு­மாயின் அடுத்­த­தாக அதி­கூ­டிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கொண்ட தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பிற்கே எதிர்க்­கட்சி தலைவர் பதவி வழங்­க­வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது.
1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment