மன்னார் மடு திருத்தலத்தில் அமைக்கப்பட்ட அரச மத விழா ஒருங்கிணைப்பு
அலுவலகம் இன்று திங்கட்கிழமை(10) காலை வைபவ ரீதியாக திறந்து
வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை, மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை, கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.ஆர்.குணவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டு வைபவ ரீதயாக திறந்து வைத்துள்ளனர்.
மடு திருத்தளத்தில் யூன் மாதம் 2 ஆம் திகதி மற்றும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஆகிய இரு தினங்களிலும் இடம் பெரும் மடு அன்னையின் திருவிழா அரச திருவிழாவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த இரு திருவிழா தொடர்பாக முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் ஒரு அலுவலகமாகவே குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது மடு பிரதேச செயலாளர் சத்தியசோதி, மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்ஸி டி மேல், பொலிஸ் அதிகாரிகள், திணைக்களத்தின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து எதிர் வரும் 15 ஆம் திகதி இடம் பெறவுள்ள மடு அன்னையின் ஆவணித்திருவிழா தொடர்பான முன் ஆயத்தங்கள் தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்-

No comments:
Post a Comment