August 24, 2015

கூத்தமைப்பின் தேசிய பட்டியலில் துரைரெட்ணம் மற்றும் சாந்தி நியமனம்!

ஒருவாறாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நிறைவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி திருகோணமலையில் போட்டியிட்டு சம்பந்தனுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற
க.துரைரட்னசிங்கம் மற்றும் வன்னியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோரும் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.கடந்த தேர்தலில் 14 ஆசனங்களை வென்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 2 மேலதிக ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.இதற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக கடந்த மூன்று தினங்களாக கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.
 
சுரேஷ்பிரேமசந்திரனுக்கும், வினோநோகராத லிங்கத்துக்கும் உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்று அதிகளவில் வலியுறுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
 
தற்போது இந்த பட்டிய்ல தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.


No comments:

Post a Comment