ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தேசியப்பட்டியல் மூலம் கிடைத்துள்ள 12 ஆசனங்களில் தலா 6 ஆசனங்களை தமக்குள் பிரித்துக் கொள்வது குறித்து மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இது குறித்து இரண்டு தரப்பினரும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச தரப்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பிலும் இருந்து தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு இரண்டு தேசியப்பட்டியல்கள் கிடைத்துள்ளன.
இதில் ஏற்றுக்கொள்ளக் கூடிய தேசியப்பட்டியல் சம்பந்தமாக தேர்தல் ஆணையாளரால் தீர்மானம் ஒன்றை வழங்க முடியாதிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் இருத்தரப்பிலும் முடிவு ஒன்று எட்டப்படவில்லை என்றால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு சென்று தீர்த்து கொள்ளும் நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment