இம்முறை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 40 ஆயிரத்து 926 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கும் புலமைப்பரிசில்
வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இப்பரீட்சை 2,907 பரீட்சை நிலையங்களில் நடைபெறும். பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் 02 இலட்சத்து 54 ஆயிரத்து 373 மாணவர்கள்சிங்கள மொழி மூலமும் 86 ஆயிரத்து 553 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இப்பரீட்சைக்காக விண்ணப்பித்த பாடசாலை விண்ணப்பதாரிகளின் பரீட்சை சுட்டெண் உள்ளடக்கப்பட்ட வரவு இடாப்புக்கள் பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதுவரை வரவு இடாப்புக்கள் கிடைக்காத பாடசாலைகள் இருப்பின் குறித்த பாடசாலை அதிபர்கள் தமது பாடசாலை இலக்கம், முகவரி என்பவற்றுடன் விண்ணப்பதாரிகளின் சகல தகவல்களையும் பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்புக்கிணங்க உடனடியாக எழுத்து மூலம் அறிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment