August 2, 2015

கருணா குழு உறுப்பினர் 35ஆம்கொலணிப்பகுதியில் கைது!

மட்டக்களப்பு; வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம்கொலணிப்பகுதியில் வீடு ஒன்றை தீயி;ட்டு கொழுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டுவந்த நபர்
கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கடந்த 29ஆம் திகதி இரவு 35ஆம்கொலணிப்பகுதியில் உள்ள வீடு ஒன்று இனந்தெரியாதவர்களினால் தீயிடப்பட்டதுடன் அதனால் வீட்டில் பலத்த சேதம் ஏற்பட்டது. 
இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர். 

இதன்போது மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணையின் அடிப்படையில் இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டதாகவும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் கருணா குழுவை சேர்ந்தவரெனவும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment