இலங்கை உட்பட ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய நாடுகளில் 2014 ஆம் ஆண்டில் புதிதாக சுமார் மூன்று லட்சத்து 40 ஆயிரம் பேர் எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் எயிட்ஸ் வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
இந்த பிராந்திய நாடுகளில் கடந்த ஆண்டு எயிட்ஸ் நோய் காரணமாக சுமார் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
புதிய அறிக்கைகளுக்கு அமைய, ஆசிய, பசுபிக் பிராந்திய நாடுகளில் சுமார் 5 மில்லியன் பேர் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் வைரஸ் தொற்றுடன் வாழ்ந்து வருவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டு வரையான கடந்த 14 வருடங்களில் இந்த பிராந்தியத்தில் எயிட்ஸ் நோயினால் ஏற்படும் மரணங்கள் 11 வீதமாக அதிகரித்துள்ளது.
ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களில் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 3.1 மில்லியன் வயது வந்தவர்கள் எயிட்ஸ் வைரஸ் எதிர்ப்பு சிகிச்சையை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என ஆய்வுகளில் தெரரியவந்துள்ளது.
No comments:
Post a Comment