பருத்தித்துறை மாவட்ட நீதிபதி மா.கணேசராசா புலமைப்பரிசில் பெற்று லண்டன் பல்கலைகழத்தில் கலாநிதிப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கா செல்லவுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு புலமைப்பரிசில் பெற்றுச் சென்று சட்டமுதுமானிப்பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகம், கொழும்பு சட்டக்கல்லுாரி, பண்டாரநாயக்கா சர்வதேச கற்கைகள் நிலையம் ஆகியவற்றிலும் பட்டங்கள் பெற்றுள்ளார்.
லண்டன், தாய்லாந்து ஆகிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான சர்வதேச விருதுகளை, சர்வதேசநீதிபதிகள் குழாம் நொட்டிங்காம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பெற்றுக்கொண்டுள்ளார்.
நீதிபதி மா.கணேசராஜா பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுாரியின் பழையமாணவராவார். இவரை அக் கல்லுாரி தனது கல்லுாரியின் மைந்தர்களுடன் சேர்ந்து 27.06.2015ம் திகதியன்று நடந்த பரிசளிப்பு தின, கல்லுாரி தின விழாவில் கௌரவப் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
சமூக நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள இவர் தனது நீதிமன்ற ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சமூகவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் கடுமையான நடைமுறைகளைக் கையாண்டு தீர்ப்பு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment