July 3, 2015

இரு தேசங்கள் ஒரு நாடு என்ற கோட்பாட்டுடன் வடக்கு கிழக்கில் போட்டியிடுவோம்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தமிழ்தேசிய மக்கள் முன்னணி இரு தேசங்கள் ஒரு நாடு என்னும் கொள்கை அடிப்படையில் தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் தமிழ்தேசியத்தின் உயர்ச்சிக்கா? அழிவுக்கா? வாக்களிக்கப்
போகிறார்கள் என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் தொடர்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நிலைபாடு தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் வடகிழக்கு மாகாணங்களில் போட்டியிடும் . இந்த தேர்தல் ஒரு திருப்புமுனை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதலால், மக்கள் சிந்த்தித்து தெளிவான ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாம் கடந்த ஜந்து வருடங்களாக தொடர்ச்சியாக கூறிக் கொண்டிருக்கும் இரு தேசங்கள் ஒரு நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் தேர்தலை சந்திக்கவுள்ளோம்.
தமிழ் மக்கள் தமிழ்தேசியத்தின் வளர்ச்சிக்கா? அழிவுக்கா? வாக்களிக்கப்போகி றீர்கள் என்பதை தீர்மானித்து வாக்களியுங்கள். தமிழ் மக்கள் கடந்த 60 வருட காலத்தில் ஜனநாயக வழி மற்றும் ஆயுத வழிகளில் போராடியிருக்கிறார்கள். இந்த வழிகளில் அவர்கள் கொடுத்துள்ள உழைப்புக்கும், தியாகங்களுக்குமான விலை என்பது,தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் ஒரு தனித்துவமான தேசமாக வாழ்வது மட்டுமே ஆகும்.
போருக்குப் பின்னரும் காணாமல்போனவர்கள் , தமிழ் அரசியல் கைதிகள் விடய ம், தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், காணி பறிப்பு, இராணுவமயமாக்கல், திட்டமிட்ட குடியேற் றங்கள், பொருளாதார சுரண்டல் போன்ற கட்டமைப்புசார் இன அழிப்பு விடயங்கள் தொடர்பில் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சிறந்த முறையில் எதிர்ப்புக்குரல் ஒலித்திருக்கின்றது. என்றார்.

No comments:

Post a Comment