வடக்கு, கிழக்கில் அசாதாரண சூழலின்போது காணாமல் போன உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி யாழ். நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று காலை இடம்பெற்றது.வடகிழக்கைச் சேர்ந்த காணாமல்
போனோர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர், நல்லாட்சி இருக்கும் நாட்டில் நாமும் நலமாய் இருக்கலாம், ஏன் இந்த நிலை, எனது அப்பாவை மீட்டுத் தாருங்கள், எனக்கு எனது அப்பா வேண்டும், போர்முடிந்து ஆறு வருடங்களுக்கு பின்னரும் எமது உறவுகளை இழந்து தவிக்கின்றோம் எனக் கதறி அழுததோடு பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவிற்குக் கொண்டுவரப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது. அதன் பின்னர் உண்மைகளைக் கண்டறிவதற்காக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தது.
காணாமல் போனோர் உறவுகள் தொடர்பில் வாக்கு மூலங்கள் வழங்கப்பட்டு ஆணைக்குழுவின் பரிந்துரை அறிக்கையிலும் அவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் உறவுகள் தொடர்பில் வாக்கு மூலங்கள் வழங்கப்பட்டு ஆணைக்குழுவின் பரிந்துரை அறிக்கையிலும் அவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக காணாமல் போனோரைக் கண்டறிவதற்காக மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மற்றுமொரு ஆணைக்குழுவை அரசாங்கம் நியமித்திருந்தது. இந்த ஆணைக்குழு வடகிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தமது அமர்வுகளை மேற்கொண்டு காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை திரட்டியிருந்தது.
சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான முறை-ப்பாடுகள் இவ்வாணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதேவேளை, காணாமல் போன உறவுகளால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டபோது மதியம் 12 மணி-யளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லூர் கைலாசபிள்ளையார் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment