July 5, 2015

ரணிலையும் சந்திரிக்காவையும் சந்திப்பதை தவிர்த்த மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு அனுமதியை வழங்கிய பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்திக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலையே மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து மஹிந்த தரப்பினர் மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் கூடி மைத்திரிபாலவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
அதேநேரம் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பிறந்தநாளை முன்னிட்டு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா மற்றும் பலர் பங்கேற்றிருந்தனர்.
எனினும் இந்த நிகழ்வுக்கு நேரம் தாழ்த்தி வருவதாக உறுதியளித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால வரவில்லை.
அவரின் இல்லத்துக்கு தொலைபேசியின் ஊடாக விசாரித்தபோது முதுகுவலி காரணமாக ஜனாதிபதி நேரத்துடன் படுக்கைக்கு சென்றுவிட்டதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமக்கு மற்றும் ஒரு நிகழ்வு இருப்பதாக கூறி சந்திரிக்காவும் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment