இன்று ஜூலை 22 ஆம் நாள், பகல் 12.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள பிரதமர் அலுவலக அறையில் பிரதமரைச் சந்திப்பதற்கு வைகோவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 11.45 க்கெல்லாம் வைகோ அங்கே சென்று
விட்டார். பிரதமர் நரேந்திர மோடி 12 மணிக்கே வைகோவை அழைத்தார். உள்ளே நுழைந்தவுடன், ‘நரேந்திர மோடி வைகோவைக் கட்டித் தழுவிக்கொண்டு, நீங்கள் என்னைச் சந்திக்க வந்தததில் மிக்க மகிழ்ச்சி’ என்றார்.‘நான் தினமும் உங்களை விமர்சித்து வருகிறேன். ஆனாலும் நீங்கள் என் நண்பர். சந்திக்க நேரம் கேட்டவுடனே உடனே வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி’ என்றார் வைகோ
‘நீங்கள் உணர்ச்சிடமையமானவர். அதனால்தான் ஈழப்பிரச்சினையை அப்படி அணுகுகிறீர்கள்’ என்றார்.
நான் கடைசியாக உங்களைக் கடந்த ஆண்டு மே 23 ஆம் நாள், நீங்கள் பதவி ஏற்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு குஜராத் பவனில் சந்தித்தேன். நினைவு இருக்கிறதா? என்று வைகோ கேட்டார்.
‘எப்படி மறக்க முடியும்? நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்று வந்தேன். ராஜபக்சே விசயத்தில் எப்படி நடந்துகொண்டோம் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா?’ என்றார்.
‘நன்றாகத் தெரியும்’ என்றேன்.
‘நான் வந்த நோக்கத்தைச் சொல்லுகிறேன். இலங்கையில்தான் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், இந்தியாவில் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் சேசாசலம் வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்நத் 20 கூலித் தொழிலாளர்களான தமிழர்கள், ஆந்திர அரசின் வனத்துறையாலும், சிறப்புக் காவல்படையினராலும் மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.
உண்மையை மறைக்க போலீசுடன் மோதல் என்று கட்டுக்கதையை அவிழ்த்து விட்டனர். சம்பவத்தில் மூன்று சாட்சிகள் நடந்ததைச் சொன்னதன்பேரில், 20 தமிழர்கள் படுகொலை குறித்த உண்மை வெளிவர, மத்திய அரசின் சிபிஐ விசாரணை வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்தது.
ஆனால், இந்தப் படுகொலைகளை மூடி மறைக்கத் தீவிரமாக ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர அரசு, மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிராக, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று உள்ளது.
சொந்த நாட்டிலேயே தமிழர்கள் இப்படிப் படுகொலை செய்யப்படுவது எங்கள் இதயத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டுகிறது. நீதி கிடைக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வைகோ சொன்னவுடன், ‘இந்தக் கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இரண்டாவது, நீங்கள் வெற்றி பெற்றவுடன் மே 19 ஆம் நாள், நான் குஜராத் பவனில் உங்களைச் சந்தித்தபோது, விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கவும், குடிதண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் நதிகள் இணைக்கப்பட வேண்டும். இதற்காக நான் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வந்து, அன்றைய வாஜ்பாய் அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டது என்பதைக் குறிப்பிட்டு விட்டு, முதலில் தென்னக நதிகளை இணைக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். ஆவன செய்வதாக நீங்கள் எனக்கு உறுதி அளித்தீர்கள். அதற்கான வேலைகள் நடக்கவில்லையே? என்று வைகோ கேட்டார்.
‘நதிகள் இணைப்பைச் செயல்படுத்த நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்’ என்றார் பிரதமர்.
‘பெருமளவு நல்ல தண்ணீர் உப்புக்கடலில் கலந்து வீணாகிறது’ என்று வைகோ கூறியபோது, ஆமாம் என்றார் பிரதமர்.
மூன்றாவதாக, இந்தியா முழுமையும் உள்ள விவசாயிகள் உங்கள் ஆட்சி ஏற்படும்; தங்கள் துயரம் நீங்கும்; விமோசனம் பிறக்கும என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள. கடந்த ஆண்டு உங்களிடம் நான், ‘ அமெரிக்காவில் ரூÞவெல்ட் கொண்டு வந்ததைப் போல விவசாயிகளுக்கு ஒரு புதிய விடியல் (NEw Deal) தாருங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு நேர்மாறாக உங்கள் அரசின் செயல்பாடுகள் உள்ளன.
நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த விவசாயி. அவர்களுடைய துன்பங்களை நேரடியாக உணர்ந்தவன். நிலம் கையகப்படுத்துதல் மசோதா மிகத் தவறானது. காங்கிரÞ கட்சி கொண்டு வந்த இந்த மோசமான திட்டத்தை நீங்கள் ஏன் தூக்கிச் சுமக்கிறீர்கள்? அதனால், விவசாயிகளுக்கு நண்பராக இல்லாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச்செயல்படுகிறீர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு வருகிறது. நாட்டு நலனின் அக்கறை உள்ளவனாக உங்களை வேண்டிக் கேட்கிறேன். தயவுசெய்து, இந்த நிலம் கையகப்படுத்துதல் மசோதாவைக் கைவிடுங்கள் என்றவுடன், பிரதமர் மோடி அவர்கள் உங்கள் வேண்டுகோளை உறுதியாகப் பரிசீலிக்கிறேன் என்றார்.
அதன்பின்னர் பிரதமர் பொத்தானை அழுத்தி, வீடியோ தொலைக்காட்சியினரையும், புகைப்படக் கலைஞர்களையும் உள்ளே அழைத்தார். வைகோ முதலில் அவருக்குப் போர்த்திய பொன்னாடையைத் திரும்ப வைகோ கையில் கொடுத்து அவருக்குப் போர்த்தச் செய்தார். ‘நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம். இது உங்கள் வீடு. நீங்கள் எப்போதும் வரலாம்’ என்றார்.
‘பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் அன்றுதான் நீங்களும் பிறந்து இருக்கின்றீர்கள் என்பதை, முன்பு உங்களுக்கு வாழ்த்துச் சொல்லும்போது நான் கூறினேன்’ என்றார் வைகோ.
‘நன்றாக நினைவு இருக்கிறது’ என்றார் பிரதமர்.
இந்தச் சந்திப்பு இருபது நிமிடங்கள் நீடித்தது. 20 தமிழர்கள் படுகொலை குறித்த கோரிக்கை மனுவைப் பிரதமரிடம் வைகோ கொடுத்தார்.
‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை – 8 மறுமலர்ச்சி தி.மு.க.,
22.07.2015
சென்னை – 8 மறுமலர்ச்சி தி.மு.க.,
22.07.2015
20 தமிழர்கள் படுகொலை குறித்து சிபிஐ விசாரணை
பிரதமர் நரேந்திர மோடியிடம் வைகோ கோரிக்கை!
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று (22.7.2015) பகல் 12 .மணியளவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, தில்லியில் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அவரிடம் வைகோ வழங்கிய கோரிக்கை:
பிரதமர் நரேந்திர மோடியிடம் வைகோ கோரிக்கை!
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று (22.7.2015) பகல் 12 .மணியளவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, தில்லியில் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அவரிடம் வைகோ வழங்கிய கோரிக்கை:
அன்புள்ள திரு நரேந்திர மோடி அவர்களுக்கு,
வணக்கம். 2015 ஏப்ரல் 7 ஆம் நாள், ஆந்திர மாநிலம் செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்புக் காவல்படையும், ஆந்திர மாநில வனத்துறையும் சேர்ந்து, 20 தமிழர்களை ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்ததை, நெஞ்சைத் துளைக்கின்ற வேதனையோடு தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
கொல்லப்பட்டவர்களுள் 13 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர்கள்; 7 பேர் தாழ்த்தப்பட்ட மலைவாழ் பழங்குடிகள். வறுமையின் விளிம்பில் உழல்கின்ற இவர்கள், அன்றாடப் பிழைப்பிற்காகப் பல பகுதிகளுக்கும் சென்று வேலை செய்து வருபவர்கள். கடந்த ஏப்ரல் 7 ஆம் நாள், ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் பேருந்தில் சென்று கொண்டு இருந்த இவர்களை, ஆந்திரக் காவல்துறையினர் பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி, காட்டுக்குள் இழுத்துச் சென்று, ஈவு இரக்கம் இன்றி மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்று, உடல்களைக் காட்டுக்குள் வீசி எறிந்துள்ளனர்.
ஆனால், அந்தத் தொழிலாளர்கள் தங்களைத் தாக்க முயன்றதாகவும், தற்காப்புக்காக அவர்களைச் சுட்டுக் கொன்றதாகவும் அப்பட்டமான கட்டுக்கதையை அரங்கேற்ற முயன்று வருகின்றனர்.
பல்வேறு மனித உரிமை அமைப்புகள், குறிப்பாக மனித உரிமைகள் வழக்குரைஞர் ஹென்றி திபேன் அவர்கள் தலைமையில் இயங்கி வருகின்ற தமிழகத்தின் மக்கள் கண்காணிப்பகம், படுகொலைகள் நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று ஆய்வு செய்தனர். நடந்தது படுகொலைகள் என்ற உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தனர். கொல்லப்பட்டவர்களோடு பயணித்து, காவல்துறையின் பிடியில் சிக்காமல் தப்பித்து வந்த பாலச்சந்திரன், சேகர் ஆகிய இரண்டு சாட்சிகளை, ஏப்ரல் 13 ஆம் நாள் புது தில்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பு நிறுத்தி, சாட்சியங்களைப் பதிவு செய்தனர். 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்ட இடத்தில் இருந்து தப்பி வந்த இளங்கோ, புதுச்சேரியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களில் இருந்த காயங்களை வைத்து, அவர்கள் மிகக் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. அவர்களுடைய உடல் உறுப்புகளை வெட்டியும், கண்களைத் தோண்டியும், நாக்குகளை அறுத்தும் மிகக் கொடூரமாக வதைத்துள்ளனர். அதனால் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்து உள்ளனர். ஆனால் உடல்களைக் கொண்டு வந்த காவல்துறையினர், சாட்சியங்களை அழிக்கின்ற நோக்கத்தில், உடல்களை உடனடியாக எரிக்க வேண்டும் என்று மிரட்டி எரிக்கச் செய்துள்ளனர்.
ஆனால், உறவினர்கள் மற்றும் ஊராரின் எதிர்ப்பு காரணமாக, ஆறு உடல்கள் மட்டும் எரிக்கப்படவில்லை. அவற்றை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால், ஆந்திர மாநில மருத்துவர்களைக் கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், இதுநாள்வரையிலும் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை.
மனித உரிமைகளை ஆயிரம் அடி ஆழத்தில் புதைக்கின்ற வகையில் இந்தப் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. எனவே, அனைத்துச் சான்றுகளையும் ஆய்வு செய்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், இந்தப் படுகொலைகள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்; கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இடைக்கால உதவியாக தலா எட்டு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அறிவித்தது.
ஆனால், ஆந்திர மாநில அரசு, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை பெற்றுள்ளது.
எந்தவிதமான என்கவுண்டரும் நடக்கவில்லை; நடந்தது அப்பட்டமான படுகொலை என்பதற்கு ஏராளமான ஆவணச் சான்றுகள் உள்ளன. உண்மை இல்லை என்றபோதிலும், அந்தத் தொழிலாளர்கள் செம்மரம் கடத்துவதற்காக வந்தார்கள் என்பதை வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும்கூட, அவர்களைச் சுட்டுக் கொல்வதற்குக் காவல்துறைக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
அரசியல் சட்டத்தின் 21 ஆவது பிரிவின்படி, ஒவ்வொரு குடிமகனின் உயிருக்கும், மனித உரிமைகளுக்கும் வழங்கப்பட்டு இருக்கின்ற பாதுகாப்பினை, ஆட்சியாளர்கள் புறந்தள்ளி விட முடியாது.
நீதித்துறையின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில், மிகவும் கவலைக்குரிய இந்தப் படுகொலைகள் குறித்து, சிபிஐ விசாரணை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி,
தங்கள் அன்புள்ள,
வைகோ
வைகோ
பெறுநர்
மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள்,
இந்தியப் பிரதமர்,
சௌத் பிளாக்,
புது தில்லி
இந்தியப் பிரதமர்,
சௌத் பிளாக்,
புது தில்லி
No comments:
Post a Comment