July 20, 2015

அச்சுவேலியில் 2நாள் பழகிப்பார்த்த யுவதி ஆறுமாத கர்ப்பிணி!

யாரிவனோ? யாரிவனோ.. பெயரே தெரியாது.. ஊரே தெரியாது.. நெஞ்சில் நுழைந்து விட்டான்’ என பாடிஆடும் கதாநாயகிகளை சினிமாவில் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் இதையெல்லாம் கடந்து, பெயர், ஊர், எதுவுமே தெரியா ஆணிடம் ஏமாந்து கர்ப்பந்தரித்த யுவதியொருவரை கண்டு அச்சுவேலி பொலிசார் ஆடியே போய்விட்டனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.
ஊர், பெயர், தொழில் உள்ளிட்ட எந்த விபரமும் தெரியாத ஆணொருவருடன் உல்லாசமாக இரண்டு நாட்கள் இருந்து கர்ப்பவதியாகிவிட்ட யுவதியொருவர் நேற்று கண்ணீருடன் அச்சுவேலி பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
தன்னை ஏமாற்றி கர்ப்பவதியாக்கிவிட்டு, தலைமறைவாகிவிட்ட அந்த ‘இனம்தெரியாத’ காதலனை கண்டுபிடித்து தருமாறு கோரி முறையிட்டுள்ளார்.
அச்சுவேலியை சேர்ந்த 35 வயதான திருமணமாகாத யுவதியொருவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். தந்தை மேசன் வேலை செய்பவர்.
கடந்த ஜனவரி மாதம் அவர்களின் வீட்டிற்கு போன இனம்தெரியாத ஆசாமியொருவன், தான் யுவதியின் தந்தையுடன் வேலைசெய்பவர் என அறிமுகம் செய்துள்ளார்.
அந்தவீட்டில் யுவதியிருப்பதை மோப்பம் பிடித்தபின்னரே அவர் சென்றுள்ளதாக பொலிசார் ஊகிக்கின்றனர். ஆசாமிவிரித்த வலையில் யுவதியும் வசமாக சிக்கிக் கொண்டு விட்டார்.
தந்தையில்லாத சமயம் இரண்டு நாட்கள் யுவதியின் வீட்டுக்கு சென்ற ஆசாமி, உல்லாசமாக இருந்துள்ளார்.
இரண்டுநாள் பழக்கத்தின் யுவதி கர்ப்பமானார். தற்போது ஆறுமாத கர்ப்பவதியாக உள்ளவர், பிறக்கப் போகும் குழந்தையின் தந்தை யார் என்பதை கண்டுபிடித்து தருமாறு அச்சுவேலி பொலிசாரிடம் கண்ணீருடன் முறையிட்டுள்ளார்.
தன்னை கர்ப்பவதியாக்கிய ஆசாமியின் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் எதுவுமே தன்னிடமில்லையென யுவதி கூறியுள்ளதால் பொலிசார் தலையை பிய்த்து கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment