July 24, 2015

இந்திய மீனவர்களுக்கு இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை!

இலங்கை கடற்பரப்பில் விரிக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவதும் தடை செய்யப்பட்ட வலைகளை பிரயோகிப்பதுமான இந்திய மீனவர்களின் செயற்பாடுகள் நீடிக்குமாயின், இந்திய மீனவர்கள்
தாக்குதலுக்குட்டுத்தப்படுவர் என  இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலைமன்னாரில் நடைபெற்ற இந்திய மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாட்டு மீனவர்களுக்கிடையிலான கூட்டமொன்றின் போதே, இலங்கை மீனவர்கள் தங்களை எச்சரித்ததாக, தமிழ்நாடு மீனவ சங்க தலைவர் ஜெஸ்டின், இந்திய ஊடகமொன்றுக்கு தெரித்துள்ளார். இந்த கூட்டத்தின் போது, இந்திய கடற்படை அதிகாரியினால் எடுக்கப்பட்ட முடிவை விரும்பாததன் காரணமாகவே இலங்கை மீனவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள அவர் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்தும் கடல் வளங்களை சேதப்படுத்துவது குறித்தும் இலங்கை அரசாங்கம் கையாண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்திய மீனவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியமைக்கு 1 கோடி ரூபாய் நட்டஈடு செலுத்த வேண்டும் என்று இலங்கை மீனவர்கள், இந்திய அரசாங்கத்துக்கு  கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர். இதேவேளை நேற்று நள்ளிரவு, அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் துரத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

No comments:

Post a Comment