June 18, 2015

எங்கே செல்கிறது யாழ்ப்பாணம்?: பாடசாலைக்குள் கத்திக்குத்து!

கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிற்குள்ளேயே கத்திக்குத்து நடந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பழிவாங்குவதற்காக மாணவன் ஒருவனை, இன்னொரு மாணவன் கத்தியால்
குத்தியுள்ளார். தரம் 11இல் கல்வி பயிலும் மாணவனை தரம் 10 மாணவன் ஒருவரே கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று நடந்தள்ளது.
நேற்று பாடசாலை இடைவேளை நேரத்தின் போது இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை சமூகம் விசாரணைகளை மேற்கொண்டு இவ்விடயத்தை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று பாடசாலைக்குச் சென்ற தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன், பெற்றோர்களும் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். குத்துவதற்குப் பயன்படுத்திய கத்தியையும் பொலிஸார் பெற்றுக்கொண்டார்.
கத்திக்குத்திற்கு இலக்காகிய மாணவனுக்கு முகத்தில் 4 தையல்கள் போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment