June 25, 2015

மிருசுவில் படுகொலை - இராணுவ அதிகரி ஒருவருக்கு மரண தண்டனை!

தென்மராட்சியின் மிருசுவில் பிரதேசத்தில் 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி, அப்பாவி தமிழ் பொதுமக்களினை கொலை செய்தார் என்று குற்றச்சாட்டப்பட்டுள்ள இராணுவ வீரருக்கு, மரணதண்டனை விதித்து கொழும்பு மேல்
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விறகு சேகரிக்கவென சென்றிருந்த கரவெட்டி இராஜகிராமம் பகுதியினை சேர்ந்த எட்டு இளைஞர்களை அப்பகுதியினில் முகாமிட்டிருந்த படையினர் படுகொலை செய்திருந்தனர்.

கொலை சம்பவம் தொடர்பில் 4 இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்ததுடன் கடந்த 15வருடங்களிற்கு மேலாக விசாரணைகள் தொடர்ந்திருந்த நிலையில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விறகு சேகரிக்க சென்றிருந்த இளைஞர்கள் படைமுகாம் பகுதியில் புதையுண்டிருந்த யுவதியொருவரது சடலத்தை அடையாளம் கண்டதையடுத்தே கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment