“எலைட்ற் என்ரரைமன்ட்“ எனும் பெயருடன் நுனாவில் பகுதியில் ஏ9 வீதியில் ஒரு விபச்சார விடுதி இயங்கி வருகின்றது.
இந்த விடுதியில் பெண்களைக் கொண்டு வந்து தங்கியிருந்து விபச்சாரம் செய்து வருகின்ற சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும்
இது தொடர்பாக பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விடுதியின் உரிமையாளரான கோபிதாசன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சாவகச்சேரியைச் சேர்ந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ரவிராஜ் அவர்களின் சாரதியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ரவிராஜ் எம்.பியைக் காட்டிக் கொடுத்து கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றே இந்த விடுதியை கட்டியும் இது போல் வேறு இடங்களிலும் பணத்தை முதலீடு செய்து சட்டவிரோதமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் என பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
குடும்பத்துடன் எலைட்ற் என்ரரைமன்ட் கட்டடத்தில் வசிக்கும் கோபிதாசன் சாவகச்சேரிப் பொலிசாருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வன்னி, வவுனியா பகுதிகளைச் சேர்ந்த யுவதிகளையும் யாழ்ப்பாணத்தில் கிராமப் புறங்களில் உள்ள யுவதிகளையும் இங்கு அழைத்து வந்து தென்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் தமக்கு நெருக்கமான யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கும் விபச்சார நடவடிக்கைகளுக்கு விடுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இவரைப் பற்றி பல தடவைகள் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொலிசாருக்கு இவர் விருந்துபசாரங்கள் செய்து மிகுந்த நட்பாக இருப்பதாகவும் அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இன்றும் குறித்தி விடுதியில் கீழே காட்டப்பட்டுள்ள ஜோடி மதியம் தொடங்கி மாலை 4 மணிவரையும் அந்த விடுதி அறையில் தங்கியிருந்துவிட்டு சென்றுள்ளனர்.
இவர்கள் குறித்த விடுதிக்கு 2500 ரூபா கொடுத்து தங்கியதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பெண்ணை வவுனியா நோக்கிச் செல்லும் பேரூந்தில் ஏற்றிவிட்டு குறித்த மன்மதராசா யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றதாகவும் எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
யாழ் குடாநாட்டில் தற்போது நடக்கும் சீரழிவுகளுக்கு கோபிதாசன் போன்றவர்களின் நடவடிக்கையே காரணம் என்பதும் இது தொடர்பாக யாழ்ப்பாண நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment