June 19, 2015

குளிக்க கழற்றிய தாலி குளித்து முடிந்ததும் மாயம்!

மாதகல் நாவல் வீதியில் உள்ள வீடு ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பின்னர் கழற்றி வைக்கப்பட்டிருந்த 5 பவுண் தாலிக்கொடி திருட்டுப் போயுள்ளது.

கடந்த 14ம் திகதி மாதகல் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பின்னர் மறுநாள் அவர் தங்கியிருந்த அறையில் தனது தாலியை கழற்றி வைத்துவிட்டு குளிக்கச் சென்றுள்ளார்.

குளித்துவிட்டு வந்தவர், வைத்த இடத்தில் தாலி காணாமல் போய்விட்டது. கடந்த நான்கு நாட்களாக தேடியும் தாலி கிடைக்காததையடுத்து, நேற்று இளவாலை பொலிசில் முறையிட்டுள்ளார்

No comments:

Post a Comment