மன்னார் தலைமன்னார் கிராமப்பகுதியில் வைத்து மன்னார் மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரும்,மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவருமான எஸ்.ஜி.வாஸ்கூஞ்ஞ என்பவர் இனம் தெரியாத குழு ஒன்றினால் நேற்று
ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
தலைமன்னார் கிராமம் பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் நீண்ட நாட்களாக விளையாடி வரும் இளைஞர் குழு ஒன்றினால் தொடர்ச்சியாக அப்பகுதி மக்களுக்கும்,அவ்வீதியால் செல்பவர்களுக்கும் தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகள் விளைவிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடையம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸாருக்கும் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்த நிலையில் தலைமன்னார் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் அசமந்த போக்குடன் செயற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த காணியில் இளைஞர் குழுவினர் விளையாட்டில் ஈடுபட்டதோடு மது போதையில் மக்களுக்கு இடையூரை ஏற்படுத்திய வகையில் செயற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாலை குறித்த தலைமன்னார் கிராமம் பகுதிக்குச் சென்ற மன்னார் மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளரான எல்.ஜி.வாஸ்கூஞ்ஞ அப்பகுதியில் இடம் பெற்ற சம்பவத்தை புகைப்படம் எடுத்துவிட்டு தலைமன்னார் கிராமப்பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வீட்டிற்குச் சென்ற சுமார் 50 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடங்கிய குழுவினர் வீட்டிற்கு வெளியில் நின்று ஊடகவியலாளரை அச்சுறுத்தியுள்ளனர்.
நீண்ட நேரத்தின் பின் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்று ஊடகவியலாளர் வாஸ் கூஞ்ஞ அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளதோடு மேலதிக விசாரனைகளை மேற்கொணடனர்.
ஊடகவியலாளர் வாஸ் கூஞ்ஞ எடுத்த புகைப்படங்களை அழிக்குமாறு குறித்த இளைஞர் குழுவினர் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.வீட்டைச் சுற்றி இளைஞர்கள் பலர் உள்ளதாகவும்,அவர்களில் பலர் மது போதையில் வீட்டின் மீது கற்களை எறிவதாகவும் தெரிய வருகின்றது.
பிந்திக்கிடைத்த தகவலின் படி ஊடகவியலாளர் எல்.ஜி.வாஸ்கூஞ்ஞ உள்ள குறித்த வீட்டிற்குச் சென்ற பொலிஸ் உயரதிகாரிகள் ஊடகவியலாளரை பொலிஸ் பாதுகாப்புடன்,பாதுகாப்பின் நிமித்தம் தலைமன்னார் பொலிஸ் நிலையததிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.

No comments:
Post a Comment