June 29, 2015

தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியின் கீழ் போட்டியிடுவதா என்று இன்னமும் தீர்மானிக்கவில்லை: முத்து சிவலிங்கம்!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியின் கீழ் போட்டியிடுவதா என்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை என முன்னால் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
27.06.2015 அன்று கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கட்சி  கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியானது சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் கூட்டணியின் கீழ் போட்டியிடவும் தீர்மானித்துள்ளன.
எனினும் இது குறித்த இறுதி தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை. விரைவில் இது குறித்த தீர்மானம் எட்டப்படும். மலையக மக்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் கட்சிகளுடனேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும்.
இது தொடர்பில் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது எனவும் தலைவர் முத்து சிவலிங்கம் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment