June 19, 2015

யாழில் பாக்கு வைத்திருந்த இந்தியர் சிறையிலடைக்கப்பட்டார்!

239 நிஜாம் பாக்குகளை தம்வசம் வைத்திருந்த இந்தியா தமிழ்நாட்டை சேர்ந்த நபர் ஒருவரை எதிர்வரும் 22ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிபதி மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுலாவிசாவில் வந்த திருப்பூரை சேர்ந்த சுப்பிரமணி செந்தில்க்குமார் (32) என்பவர் மந்திகைப்பகுதியில் தங்கியிருந்த இடத்தை பருத்தித்துறைப் பொலிசார் நேற்றுமுன்தினம் சோதனையிட்டபோது 239 நிஜாம் பாக்குகளை கைப்பற்றினார்கள்.


அவரை நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தியபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment