அச்சுவேலி திரேசா மகளீர் கல்லுாரியில் பலாலி 52ம் டிவிசன் இராணுவத்தில் செய்த வேலைகள் அச்சுவேலிப் பகுதி மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அப் பாடசாலையின் மைதானம் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாது காணப்பட்டதால் அப் பாடசாலையின் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டது.
இதனையடுத்து பாடசாலை அதிபர் பல அரசியல்கட்சிகள், அமைப்புக்களுடனும் தொடர்பு கொண்டும் எந்தவிதமான பிரயோசனமும் இல்லாது மைதானம் புனரமைக்கப்படாது இருந்ததுள்ளது.
இதன் பின்னர் அப்பாடசாலை அதிபர் பலாலி இராணுவத்தின் 52ம் டிவிசன் படையதிகாரிகளுக்கு மைதானத்தைப் புனரமைத்துத் தரும்படி கோரியவுடன் படையதிகாரிகள் அதற்குச் உடனடியாகச் சம்மதித்து காரியத்தில் இறங்கினர்.
மேடு பள்ளங்களாக இருந்த பாடசாலை மைதானத்தை பைக்கோவின் உதவியுடனும் படையினரின் உதவியுடனும் இரு நாட்கள் பாடுபட்டு பாடசாலை மைதானத்தை சிறந்த முறையில் புனரமைத்துக் கொடுத்துள்ளனர். படையினரின் இந்த நடவடிக்கைக்கு பாடசாலை அதிபர் மிகுந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் படையினர் மைதானத்தைப் புனரமைப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் படையினரின் இவ்வாறான செயற்பாடுகள் தமக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் எனவும் படையினருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment