June 26, 2015

வடமராட்சியில் முறுகல் நடந்தது என்ன?

விளையாட்டு மைதானத்தில் முகவரி பிரச்சனையால் இரண்டு குழுக்கள் பெரும் மோதலில் ஈடுபட்ட பரபரப்பு சம்பவம் நேற்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் நடந்துள்ளது.

வடமராட்சியின் கொற்றாவத்தை பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த குழு மோதலில் ஆறுபேர் காயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொற்றாவத்தையில் சிவானந்தா விளையாட்டு கழகம் உள்ளது. அந்த மைதானத்தை வழங்கியவர் சிவானந்தம் என்பவர்.
இந்த மைதானத்தை பயன்படுத்தவது தொடர்பில் அந்த பகுதியில் சிறிதுகாலத்தின் முன்னர் சர்ச்சை தோன்றியிருந்தது. பொலிகண்டி கிழக்கு, அல்வாய் மேற்கு, கரணவாய் வடக்கை சேர்ந்தவர்கள் மைதானத்தை பயன்படுத்தி வந்தனர்.
எனினும், இவர்களிற்குள் சர்ச்சை ஏற்பட்டு கிராம மோதலாக உருவெடுக்கும் நிலை வந்தபோது, விடயம் பருத்தித்துறை பொலிசாரிடம் சென்றது.
அவர்கள் நிதிமன்றத்தில் விடயத்தை பாரப்படுத்தியுள்ளனர். அனைத்து தரப்பினரும் மைதானத்தை பயன்படுத்தலாமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், சிவானந்தா விளையாட்டு கழகத்தை சேரந்த சிலர், அந்த மைதானத்தின் பெயரை மாற்ற முயன்றுள்ளனர். அல்வாய் வடமேற்கு விளையாட்டு மைதானமென பெயர் மாற்ற முயன்றதாக கூறப்படுகிறது.
எனினும், இதற்கு ஒருதரப்பு சம்மதிக்கவில்லை. ஏற்கனவே இருந்த மைதானப்பிரச்சனை இந்த வடிவத்தில் நேற்று முற்றியது.
இதனையடுத்து சிவானந்தா விளையாட்டு கழக வாலிபர்கள் நேற்று கத்திகள், பொல்லுகள் சகிதம் படையெடுத்து
சென்று மற்றைய தரப்பை தாக்கியுள்ளனர்.
இரண்டு தரப்பும் கடுமையாக மோதிக் கொண்டதில் சின்னத்தம்பி சிவபாதம் (53), தனபாலசிங்கம் சுரேஸ்குமார் (50), சச்வராசா சுஜீத் (24), நடேசு ரவிச்சந்திரன் (50), மதிமோகன் கௌசிகன் (20), தர்மலிங்கம் குணசீலன் (36) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், வைத்தியசாலைக்குள்ளும் புகுந்து தாக்குவதற்கு ஒரு குழு எத்தனித்துள்ளது.  பின்னர்
பொலிசார் வந்ததும், அவர்கள் தலைதெறிக்க ஓடித்தப்பிவிட்டனர்.
இது தொடர்பில் அந்த பகுதியை சல்லடையிட்டு வரும் பொலிசார், ரௌடிகள் பலரை கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment