June 25, 2015

வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பில் ஐ.நாவில் கண்ணீருடன் சாட்சி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதிகள் இறுதிக் கட்ட யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் வந்து இராணுவத்திடம் சரணடைந்த பின் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஐநாவில் சாட்சி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் மகனும், சமாதானச் செயலாளரான புலித்தேவனின் மனைவியும், நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் மலரவனின் மனைவியும் இவ் வெள்ளைக்கொடி விவகாரத்தில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களை அளித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான காரியாலத்தியில் அமைந்துள்ள விசேட அறையொன்றில் நேற்று   இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இவர்கள் கண்ணீர் மல்க சாட்சி அளித்துள்ளனர்.

புலித்தேவன் இறுதிக் கட்டத்தில் சரணடைந்து கொல்லப்பட்டதாகவும் தனக்கு சர்வதேசத்திடம் இருந்து நீதி வேண்டும் என்றும் அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் தான் சரணடைந்து பின் செட்டிக்குளம் முகாமில் தங்கியிருந்தபோது தனது கணவருடன் தொடர்பு கொண்டதாக மனைவி கூறியுள்ளார்.

மற்றுமொரு பெண் தனது கணவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாகவும் பின் தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் 15 லட்சம் ரூபாவுடன் நான்காம் மாடிக்கு வந்தால் கணவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் தனக்கு அறிவிக்கப்பட்டதால் கடன் வாங்கி பணத்தை திரட்டி நான்காம் மாடிக்குச் சென்று கொடுத்தபின் கணவரை விடுதலை செய்யாது தன்னை ஏமாற்றியதாகவும் இன்னும் தனது கணவரது நிலை என்னவென்று தெரியாதெனவும் பெண் ஒருவர் கண்ணீருடன் சாட்சியளித்துள்ளார்.

No comments:

Post a Comment