பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். அதனை மக்கள் நம்பிவிடுவார்கள். பின்னர் அது பொய்யான செய்தி என்று நீங்களே அவர்களிடம் சொன்னாலும், அதனை அவர்கள் நம்பமாட்டார்கள்' என்பது
இரண்டாம் உலகப் போர் காலத்தில் நாசிகளால் உருவாக்கப்பட்ட தத்துவம். அதனைத்தான் சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்கள் புலம்பெயர் தமிழர்களிடம் பிரயோகிக்க முற்படுகின்றனர்.
தமிழீழப் போர்க் களத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த சிங்கள அரசுக்குப் புலம்பெயர் தமிழர்களது போர்க் களத்தைத் தோற்கடிப்பது இலகுவானதாக இல்லை. ஈழத் தமிழர்கள் மீது அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, தமிழினப் படுகொலை ஊடாகப் பெற்றது போல், புலம்பெயர் தமிழர்கள் மீது பலப் பிரயோகம் மேற்கொள்ள முடியாத சிங்கள அரசு புலனாய்வாளர்கள் மூலம் உளவியல் யுத்தத்தைத் தொடுத்து வருகின்றது. கே.பி. ஊடாக ஆரம்பிக்கப்பட்ட இந்த உளவியல் யுத்தம், தற்போது நாயகன் ,முரளி (பாலசிங்கம் பாலமுரளி ) அன்பு , பொன்மலை , அமலன் என்ற பல பெயர்களில் தொடர்கின்றது.
இந்த உளவியல் யுத்தத்தின் ஊடாகப் புலம்பெயர் தமிழர்களைப் பிளவு படுத்துவது, அவர்களிடையே நம்பிக்கையீனங்களை உருவாக்கி, மோதல்களைத் தோற்றுவிப்பதன் மூலம் சிங்கள தேசம் தன்மீதான அழுத்தங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முற்படுகின்றது. இந்த முயற்சி வெற்றிபெற்றால் மட்டுமே சிங்கள - பௌத்த சிறிலங்காவில் தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க முடியும் என்பதும், கொடூர யுத்தத்தின் மூலம் பெற்ற சிங்கள மேலாதிக்க வெற்றியைத் தொடர்ந்து நிலை நாட்ட முடியும் என்பதை சிங்கள தேசம் நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளது.
சிங்கள தேசத்தின் இந்தப் புதிய போர் வியூகம் இரண்டு முக்கிய இலக்குகளுடன் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. ஒன்று, முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும் புலம்பெயர் தேசங்களில் பலத்துடன் திகழும் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டமைப்புக்களைச் சிதைப்பது. இரண்டாவது, புலம்பெயர் தமிழர்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கான ஒன்றிணைவுத் தளத்தை இல்லாமல் ஆக்குதல்.
விடுதலைப் புலிகளது கட்டமைப்புக்களைச் சிதைக்க வேண்டுமானால், அந்தக் கட்டமைப்புக்கள் மீதான தமிழ் மக்களது நம்பிக்கையைச் சிதறடிக்க வேண்டும். அதற்கான முதல் வியூகம் கே.பி. மூலமாக முன்னெடுக்கப்பட்டது. தேசியத் தலைவர் அவர்களது இருப்பை மறுதலித்தல் மூலமாகப் புலம்பெயர் தமிழர்களது உளவுரணைச் சிதைத்து, தோற்றுப்போனவர்கள் என்ற உணர்வுக்குள் அவர்களைப் பலவீனப்படுத்துவது என்ற அந்த நகர்வு புலம்பெயர் தமிழர்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டு விட்டது.
அடுத்ததாக, தமிழ் மக்களிடமிருந்து புலிக்கொடியை அகற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. புலிக் கொடியுடனும், தேசியத் தலைவர் அவர்களது படங்களுடனும் போராட்டங்கள் நடாத்துவதால் மேற்குலக நாடுகள் தமிழர்களது போராட்டங்களைக் கணக்கிலெடுக்கமாட்டாது என்ற தத்துவங்கள் தமிழர்கள் மத்தியில் விதைக்கப்பட்டது. ஆனாலும், அதனை நிராகரித்த புலம்பெயர் தமிழர்கள் தங்களது தொடர் போராட்டங்கள் மூலம் மேற்குலகை மட்டுமல்ல, ஐ.நா.வையும் தங்களுக்காகப் பேச வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இறுதியாக, புலம்பெயர் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் மீதான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்பின் தலைமைகள் மீது நடாத்தப்படும் இந்தத் தாக்குதல் மூலம் அவர்களது பண்புகள், நடத்தைகள், அர்ப்பணிப்புக்கள் மீது புலம்பெயர் தமிழர்கள் நம்பிக்கையீனம் கொள்ள வேண்டும் என்பதே தாக்குதல் நடாத்தும் சிறிலங்காவின் புலனாய்வாளர்களின் இலக்காக உள்ளது.
விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்கள் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டது. தேசியத் தலைவர் அவர்களே அதற்கான பொறுப்பாளர்களையும் நியமித்தார். அவரது நெறிப்படுத்தலுடனேயே இந்தக் கட்டமைப்புக்கள் தமிழீழ விடுதலை நோக்கிய பாதையில் பயணிக்கின்றன என்பதைப் புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொருவரும் புரிந்தே வைத்துள்ளார்கள். முள்ளிவாய்க்கால் வரையும், அதன் பின்னரும் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்கள் தலைமையில் தமிழ் மக்கள் மேற்கொண்ட போராட்டங்களே உலக நாடுகளை ஈழத் தமிழர்கள்பால் திரும்ப வைத்ததுடன், சிங்கள அரசு மீதான போர்க் குற்ற விசாரணைக்கான அவசியத்தையும் உருவாக்கியுள்ளது. இந்தப் போர்க் களத்தின் பலமே சிங்கள அரசை அச்சம் கொள்ள வைத்துள்ளது. அதனாலேயே, விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களைச் சிதைக்கும் நோக்கத்தோடு சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்களால் இந்தத் தொடர் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தத் தாக்குதலாளிகள் பல பெயர்களில் தம்மை அறிமுகம் செய்துகொள்ளும்போதும், அவர்கள் தங்கள் குறித்த உண்மைகளை வெளியிடுவதில்லை. உரிமை கோரும் அளவிற்கு புலம்பெயர் போர்க் களங்களில் தலை காட்டியவர்களும் இல்லை. எனவே, தவறான தகவல்களுடன் இவர்கள் சிங்களப் புலனாய்வாளர்களின் இலக்கு நோக்கிப் பயணிக்கிறார்கள் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.
சிங்களப் புலனாய்வாளர்களின் இரண்டாவது இலக்கு புலம்பெயர் தமிழாகளைப் பல அணிகளாக உடைப்பது. இந்த இலக்கிற்கு சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்கள் முற்றிலும் நம்பியிருப்பது புலம்பெயர் கே.பி. குழுவினரையே. பிரான்சில் நிலையெடுத்துள்ள கே.பி. குழுவினர் தமக்கான தளம் ஒன்றை அமைத்துச் செயற்பட முற்படுகின்றனர். நாயகன், முரளி (பாலசிங்கம் பாலமுரளி ) அன்பு , பொன்மலை , அமலன் என்ற பெயர்களின் உள்ளவர்களின் முக்கிய நோக்கம், பிரான்சில் வாழும் தமிழர்களது அரசியல், கலாச்சார மையமாக உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சிதைப்பதே என வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது பின்னணி, இவர்களுக்கான வழங்கல்கள் குறித்த தகவல்கள் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்கள் நாயகன் ,முரளி (பாலசிங்கம் பாலமுரளி ) அன்பு , பொன்மலை , அமலன் ஆகியோ

No comments:
Post a Comment