நேபாளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் அந்த நாட்டை விட்டே
மக்களை வெளியேற வைப்பதை போல 27-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஜெ.வின் சொத்துக்
குவிப்பு வழக்கில் அளித்த தீர்ப்பு பல புதிய விளைவுகளை உருவாக்கிக்
கொண்டிருக்கிறது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
அதில் முக்கியமானது அரசு சிறப்பு வழக்கறிஞர்
பணியிலிருந்து சுப்ரீம் கோர்ட்டால் நீக்கப்பட்ட பவானி சிங்கிற்கு பதிலாக
ஆச்சார்யாவை கர்நாடக அரசு நியமித்து பிறப்பித்த உத்தரவு. சுப்ரீம் கோர்ட்
தீர்ப்பு வெளியான உடனேயே கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு சோனியா காந்தி
ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
அதன்படி சித்தராமையா அரசு வழக்கறிஞர் ரவிவர்மகுமாரை தொடர்பு கொண்டு பவானி சிங்கிற்கு பதில் ஆச்சார்யாவை நியமிக்க அவரிடம் பேசுமாறு கூறினார். ரவிவர்ம குமாரின் பேச்சுக்கு உடனே ஆச்சார்யா சரி என ஒத்துக் கொள்ளவில்லை.
பவானி சிங்கின் நியமனத்தில் என்னென்ன குறைகள் உள்ளன என சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கிறதோ அந்த குறைகள் இல்லாமல் கர்நாடக அரசும் உயர்நீதிமன்றமும் இணைந்து ஒரு உத்தரவை பிறப்பித்தால் சிறப்பு அரசு வழக்குரைஞர் பதவியை ஏற்பதை பற்றி யோசிப்பேன் என பட்டும்படாமல் பதில் சொன்னார் ஆச்சார்யா.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி செவ்வாய்க்கிழமையே சிறப்பு அரசு வழக்கறிஞர் மூலம் எழுத்துப்பூர்வமான பதிலை குமாரசாமியின் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டுமே என்கிற கட்டாயத்தில் இருந்தது கர்நாடகா அரசு.
பதவி ஏற்க ஆச்சார்யா சொன்ன நிபந்தனையை ரவிவர்மகுமார் மூலம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவிடம் உடனடியாக சொன்னது. ஆச்சார்யா கேட்பது சரிதானே என்று சொன்ன வகேலா பிறகு நேரடியாக ஆச்சார்யாவிடம் பேசினார்.
வகேலாவின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட ஆச்சார்யா அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியை உரிய சட்ட ஆணைகள் மூலம் பிறப்பிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
கிடுகிடுவென அரசாணை பிறப்பிக்கும் வேலையில் இறங்கிய கர்நாடக அரசும் உயர்நீதிமன்றமும் செவ்வாய் மதியம்தான் அதற்கான உத்தரவை பிறப்பித்து வெளியுலகிற்கு அறிவித்தது.
ஜெ. கொடுத்த தொல்லைகளால் நான்கு வருடம் வழக்கிலிருந்து விலகியிருந்த ஆச்சார்யா மறுபடியும் அதே பதவிக்கு வந்ததும் சமர்ப்பித்த எழுத்துப் பூர்வமான வாதம் டெக்னிக்கலாகவும், தகுதியின் அடிப்படையிலும் ஒரு அணுகுண்டாகவே அமைந்திருக்கிறது என்கிறது நீதித்துறை வட்டாரம்.
ஆச்சார்யா சமர்ப்பித்த வாதம் குறித்து நம்மிடம் விளக்கினார் சுப்ரீம் கோர்ட்டின் சீனியர் வழக்கறிஞரான சண்முகசுந்தரம்..
ஆச்சார்யா தனது சட்ட அறிவு மூலம் வீசியுள்ள அணுகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது. ஜெ. வழக்கில் கர்நாடக அரசை கேட்காமல் அவருக்கு ஜாமீன் வழங்கியது
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச். அதற்குப் பிறகு ஜெ.வுக்கு ஜான் மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தண்டனையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அப்பீல் வழக்கை மூன்று மாதங்களுக்குள் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்ட போதும்... நீதியரசர் தத்து தலைமையிலான பெஞ்ச் கர்நாடக அரசை கலந்தாலோசித்து ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமித்து வழக்கை நடத்த வேண்டும் என உத்தரவிடவில்லை.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தமிழக அரசு பவானி சிங்கை வழக்கறிஞராக நியமித்தது. அதை சரி என ஏற்றுக்கொண்ட நீதிபதி குமாரசாமி பவானிசிங்கின் வாதத்தை வைத்து தீர்ப்பளிக்க இருந்தார்.
இன்று வழக்கை நடத்த தகுதியான அரசு கர்நாடக அரசுதான் என தற்போது சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பது, ஏற்கனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச் மற்றும் அப்பீல் வழக்கை விசாரித்த குமாரசாமியின் நீதிமன்றங்கள் கர்நாடக அரசை கேட்காமல் சொத்துக் குவிப்பு வழக்கை நடத்திய நடைமுறை தவறு என சொல்கிறது.
இதைத்தான் தனது ஆழ்ந்த சட்ட அறிவின் மூலம் ஆச்சார்யா வாதமாக முன் வைத்துள்ளார். இந்த வாதம் நாளை சுப்ரீம் கோர்ட்டுக்கு இந்த வழக்கு போனாலும் மிகப்பெரிய சட்ட விளைவுகளை உருவாக்கும் என்கிறார் அவர்.
ஆச்சார்யாவும், அன்பழகனும் தாக்கல் செய்த வாதங்களுக்கு பதில் வாதம் ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பில் தாக்கல் செய்யப்படுமா? என கேட்டதற்கு, எங்களுக்கு போயஸ் கார்டனிலிருந்து எந்த உத்தரவும் வரவில்லை என்கிறார்கள் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள்.
பவானி சிங்கிற்கு நியமன உத்தரவை வழங்கிய தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடமும் கேட்டோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு போயஸ் கார்டன் நிலை குலைந்து போயுள்ளது.
ஆச்சார்யாவும், அன்பழகனும் புதிய வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு சொன்ன போதே ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அந்த வாதங்களுக்கு நாங்கள் பதில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அதில் கோட்டை விட்டு விட்டார்கள் என்றார்கள்.
பேராசிரியர் மற்றும் கர்நாடக அரசின் எழுத்துப்பூர்வமான வாதங்களுக்கும், இந்த மேல் முறையீட்டு விசாரணையே தவறு என அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தன் வாதத்தில் தெரிவித்ததற்கும் பதிலளிக்கும் வாய்ப்பை ஜெ. தரப்பு ஏன் கோரவில்லை என்பது பல வழக்கறிஞர்கள் மத்தியிலும் விவாதிக்கப்படுகிறது.
கார்டன் வட்டாரமோ, தீர்ப்பு குறித்து இங்குள்ள உறுதியான நம்பிக்கையில்தான் அதற்கெல்லாம் பதில் அளிக்க வாய்ப்பு கோரவில்லை என்கிறது.
நீதிபதி குமாரசாமி தன்னை யாரும் சந்திக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்து விட்டு தீர்ப்பை எழுதிக் கொண்டிருக்கிறார்.
ஆச்சார்யா, அன்பழகன் ஆகியோரின் எழுத்துப்பூர்வ வாதங்களையும் தீர்ப்பில் சேர்க்க வேண்டியிருப்பதால் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்ட மே 5-ந் தேதியை தாண்டும் என்கிறது கர்நாடக அலுவலக ஊழியர் வட்டாரம்.

No comments:
Post a Comment