May 27, 2015

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் செ.கஜேந்திரனை அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் நேரடியாக சென்று நலன் விசாரிப்பு !

விபத்தில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனை தமிழ் அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.கடந்த சனிக்கிழமை கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த கஜேந்திரன்,
யாழ். போதனா வைத்தியசாலையில் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் நேற்றைய தினம் இந்தியத் துணைத்தூதரக அதிகாரி அவரை நேரில் சென்று பார்வையிட்டதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி. கே. சிவஞானம், வடமாகாண விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் ஆகியோரும் பார்வையிட்டனர்.
விபத்துக்குள்ளானதிலிருந்து செ. கஜேந்திரன் அவர்களை ஏராளமான பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச அதிகாரிகள் எனப் பலர் வைத்தியசாலை சென்று பார்வையிட்டு வருவதுடன் தொலைபேசி வழியாகவும் அவரின் நலனை விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment