தமது பிள்ளைகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு தந்தைமார் விதவிதமான கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை அறிந்திருக்கிறோம்.ஆனால் இந்த தந்தை செய்த காரியத்தை போன்ற செய்திகளை அறிந்திருக்க மாட்டீர்கள். தனது மகளின் பூப்புனித நீராட்டு
விழாவிற்கு இந்த மனிதர் கசிப்பு காய்ச்சியுள்ளார். பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வீட்டை சுற்றிவளைத்து ஆசாமியை கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர் தமண பொலிசார். இந்த சம்பவம் அம்பாறையின் தமண பகுதியில் நடந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இவரது மகளின் பூப்புனித நீராட்டு விழா நடக்கவிருந்தது. விழாவிற்கு வரும் குடிமக்களை மகிழ்ச்சியில் மிதக்க வைப்பதற்காக முதல்நாள் இரவு கசிப்பு காய்ச்சியிருக்கிறார்.
மகளின் பூப்புனிதநீராட்டு விழாவை கருத்தில் கொண்டு நேற்று திங்கட்கிழமை காலையில் அவரை விடுதலை செய்து, எதிர்வரும் 13ம் திகதி அம்பாறை நீதிவான் நீதிமன்றில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

.jpg)
No comments:
Post a Comment