கல்முனையின்
தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகப்பகுதிகளில் உள்ள கிராமங்களில்
தறிகெட்டு அலையும் வாலிபர்களின் தொல்லை தாங்க மடியாதுள்ளதாக யுவதிகள்
குற்றம் சுமத்துகின்றனர். தனிமையில் செல்லும்
இளம் பெண்களிடம் பாலியல் சேஷ்டைகளில் ஈடுபடும் காவாலிகளால் வயது வேறுபாடின்றி பெண்கள் அசௌகரியப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, மணல்சேனை, ஆகிய கிராமங்களிலேயே இந்த காவாலிகள் அட்டகாசம் புரிகின்றார்கள்.
கிராமங்களின் உள்ளூர் வீதிகளில் பயனிக்கும் பெண்களின் பின்னால் சைக்கிள், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் செல்லும் இந்த காவாலிக்கூட்டம், ஆட்கள் இல்லாத பகுதிகளில் வைத்து யுவதிகளை தகாதவார்த்தைகளால் பேசி பாலியல் தொந்தரவிற்குள்ளாக்கி விட்டு தப்பிச்செல்கின்றனர்.
இதேவேளை அதிகாலை, காலை, மாலை வேளைகளில் தனியார் வகுப்புகளுக்கு செல்லும் மாணவிகளின் பின்னால் செல்லும் சிலர் மாணவிகளிடம் சேஷ்டை விடுவதாகவும், இதனால் தமது பிள்ளைகள் பாடசாலை, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செல்வதில் அச்சப்படுவதாகவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தவிர பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரம், முடிவடையும் நேரங்களில் வீதிகளில் தேவையற்ற விதத்தில் கூடிநிற்கும் கும்பல்கள் மாணவிகளிடம் சேஷ்டைகளில் ஈடுபட்டும் வருகின்றனர். அத்துடன் பெண்களிடம் தங்கநகைகள், பணம் என்பனவற்றையும் பறித்து செல்கின்றனர்.
எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக கல்முனை பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுவினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments:
Post a Comment