மன்னார் மாவட்டத்திற்கான முள்ளிவாய்க்கால்
நினைவேந்தல் நிகழ்வும் ஆத்ம சாந்தி பிராத்தனையும்,விசேட நினைவு உரையும்
மன்னார் நகர மண்டபத்தில் எதிர்வரும் திங்கள் காலை 10.00மணிக்கு இடம்
பெறவுள்ளது.
இது தொடர்பினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இளைஞரணி செயலாளர் வி.எஸ். சிவகரன் இன்றிரவு விடுத்துள்ள செய்திக்குறிப்பினில் தமிழினப்படு கொலையின் ஆறாம் ஆண்டு நினைவு நாளாகிய மே – 18 அன்று உலகெங்கும் வாழும் தமிழர்களின் இல்லங்களில் சுடர் ஏற்றி கோரமாக படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தியுங்கள்.
இறுதியுத்தத்திலே காணாமல் போன அல்லது படுகொலை செய்யப்பட்ட 146இ793 அப்பாவி தமிழ் மக்களின் உயிர்கள் விலைமதிப்பற்றவை என்பதை ஆறு ஆண்டுகள் கடந்தும் இலங்கை அரசும் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த இந்தியா உட்பட சர்வதேச சமூகமும் இதுவரை தமிழ்மக்களுக்கு எந்த வித நியாயத்தையும் பெற்று கொடுக்கவில்லை.
எனவே மறக்கமுடியுமா? மன்னிக்க முடியுமா?
நெஞ்சு பொறுக்கவில்லை உள்ளம் கசிந்துருகி உணர்வுகள் மேலெழுந்து நினைவுகள் மறந்து நீத்து நிந்தித்து கொள்ளி வாய் பேயாய்கொழுந்து விட்டு எரிகிறது என்றும் அணையாத தாகமாய் உணவின்றி, உடையின்றி இருக்க இடமின்றி மருந்தின்றி மறுவாழ்வின்றி அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு தரையாலும் கடலாலும் வானாலும் இரக்கமின்றி அரக்க குணத்துடன் அசுர வேகத்தில் வஞ்சம் தீர்த்தது சிங்கள அரசு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வும்,ஆத்ம சாந்தி பிராத்தனையும்,விசேட நினைவு உரையும் மன்னார் நகர மண்டபத்தில் திங்கள் காலை 10.00மணிக்கு இடம் பெறவுள்ளது. உங்கள் கண்முன்னே உறவுகளை தொலைத்து உணர்வின்றி ஊசலாடும் எம் உறவுகள் தார்மீக அடிப்படையில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் தமிழ்த் தேசிய உறவுரிமையுடன் அழைக்கின்றோம் என்றுள்ளது.

No comments:
Post a Comment