May 2, 2015

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுநீரகக் கற்களை அகற்றும் அதிநவீன சத்திர சிகிச்சை அறிமுகம்

யாழ்.போதனா வைத்திய சாலையில் முதன் முறையாக தோல் மூலமாக சிறுநீரகக் கற்களை அகற்றும் அதிநவீன சத்திர சிகிச்சை (percutaneous nephrolithotomy) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான முறையில் நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை
ஒன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என சிறுநீர், சனநீர் தொகுதி சத்திரசிகிச்சை நிபுணர் பா.சதீசன் தெரிவித்தார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று நண்பகல் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டால் வெட்டி அதனை அகற்றும் முறையே இதுவரை காலமும் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இம்முறையால் நோயாளர்கள் பல பாதிப்புக்களை எதிர்நோக்கி வந்தனர். வெட்டிய காயம் ஆறும் வரை வைத்திய சாலையில் தங்கியிருக்க வேண்டிய நிலையம் ஏற்பட்டது.
சிறுநீரக கல்லை தோல் மூலம் அகற்றும் புதிய சிகிச்சை முறை மூலம் காயம் ஏற்படாது. சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளர் மறுதினமே வீடு செல்வும் முடியும்.
இம்முறை வடக்கு மாகாணத்தில் முதன் முறையாக நேற்று முன்தினம் தான் அறிமுகப்படுத்தப்பட்டு முதலாவது சிகிச்சையும் வெற்றிகரமாக முடிவுற்றுள்ளது எனவும் சத்திரிகிச்சை நிபுணர் பா.சதீசன் தெரிவித்தார்.
இச்சிகிச்சை மூலம் சிறுநீர் தொகுதியில் உள்ள கிட்னி, குழாய், சலப்பை ஆகியவற்றில் ஏற்படும் கற்களை வெட்டாமல் உடைத்து அகற்ற முடியும். இச்சிகிச்சை முறைக்கான மருத்துவ உபகரணங்களை மத்திய சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment