மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை வீதியில் தரித்து நின்ற வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.குறித்த விபத்து நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பண்ணாகம் தெற்கு சுழிபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் லோகேந்திரன் என்பவரே குறித்த விபத்தில் காயமடைந்தவராவார்.
மேலும் விபத்து தொடர்பாக தெரியவருவது,
வீதியில் முன்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட வேளை வீதியில் தரித்து நின்ற வானுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியது.
தரித்து நின்ற வாகனம் வீதியின் ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ் விபத்து தொடர்பான விசாரனைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment