வவுனியா – பேயாடிகூழாங்குளம் பகுதி
மக்கள், பொது காணியை தமது கிராமத்தின் தேவைக்காக மீட்டுத் தருமாறு கோரி
ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
வவுனியா ஏ9 வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பேயாடிகூழாங்குளம் கிராமத்திற்கு சொந்தமான பொது காணி, கலாசார அமைப்பொன்றுக்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
பிரதேச செயலாளர் பொதுமக்களின் கோரிக்கைக்கு மாறாகவே இந்த காணியை வழங்கியுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமது கிராமத்திற்கு சொந்தமான இந்த காணியை கலாசார அமைப்புக்கு வழங்கியுள்ளமையால், தமது கிராமத்திற்கு பொது கட்டிடங்கள் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த கிராமத்திற்கு பொதுகட்டிடம், முன்பள்ளி, பாடசாலை கட்டிடம் ஆகியன காணப்பட்ட போதிலும், அவை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment