ஹெரோயினுடன்
கைதானவர்களுக்கு பிணை அனுமதி வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்காத
யாழ்.பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி
பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் யாழ்.பொலிசாரால் கைது செய்யப்பட்டு கடந்த 09 ஆம் திகதியன்று யாழ்.பொலிஸ்நிலையத்தில் ஆயர்ப்படுத்தியிருந்தனர். குரித்த இளைஞர்கள் இருவரும் மன்றில் ஆயர்ப்படுத்தப்பட்ட போது இளைஞர்கள் தரப்பில் ஆயராகியிருந்த சட்டத்தரணி குறித்த இருவரையும் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரியிருந்தார்.
பிணை விண்ணப்பத்தை பரீசீலனை செய்த யாழ்.நீதிமன்ற பதில் நீதவான் குறித்த இருவரினையும் பிணையில் விடுவிப்பதற்கு மன்றில் ஆயராகியிருந்த பொலிசார் ஆட்சேபனை ஏதும் தெரிவிக்காத காரணத்தினால் இருவரையும் பிணையில் விடுவித்து முப்பதாம் திகதி குறித்த வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டும் எனவும் தெரவித்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு கடந்த 30 ஆம் திகதியன்று யாழ்.நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமார் முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கு பொலிசார் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காமைக்கு பொலிஸ் தரப்பு நீதவானிடம் பேச்சு வாங்கியதோடு,
யாழ்.பொலிஸ் நிலைய போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி குறித்த பதவிக்கு தகுதி வாய்ந்தவரா? என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார். முன்னர் பதில் நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்ட இரு இளைஞர்களையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் பிணையில் விடுவிப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத பொலிசாருக்கு நீதவான் கடும் திட்டு கொடுத்ததோடு இந்தோனிசியாவில் போதைப்பொருள் கடத்தினால் கைது இங்கு மட்டும் ஒன்றுமில்லையா என்றவாறாக போலீசாரை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரியான சிசிர பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
இதே வேளை அப்பாவிகளை போய்க்குற்றச்சாட்டில் கைது செய்து உள்ளே தள்ளும் பொலிசாருக்கு நீதவான் நல்ல பாடம் புகட்டியுள்ளார் என தெரவிக்கப்படுகின்றது. ஈழத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை சீரழிப்பதற்கே பொலிசார் இவ்வாறு செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment