May 16, 2015

சென்டெனி தமிழ்ச்சங்கத்தின் 15வது ஆண்டு நிறைவு விழா!

கடந்த 25.04.2015 அன்று சென்டெனி porte de paris bourse de travail மண்டபத்தில் மேற்படி ஆண்டுவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. 13.00மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகுமென அறிவித்ததற்கமைய அந்நேரத்திற்கே நிகழ்வுகள் ஆரம்பமானது வரவேற்கத்தக்கவிடயம்.

சென்டெனி தமிழ்ச்சோலை மாணவ மாணவிகள் இருமருங்கிலும் அணிவகுத்துநிற்க விருந்தினர்களை நிர்வாகி சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள்மண்டபத்திற்குள்அழைத்துவந்தனர்.
தமிழ்ச்சோலைத்தலமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. க.யெயக்குமாரன் செயற்குழு உறுப்பினர் திரு.ச. அகிலன் நிர்வாகி திருமதி. வசந்தி சுரேஸ் மாவீரர் பெற்றோர்கள்மங்கலவிளக்கினை ஏற்றிவைத்தனர்.தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
கரோக்கி இசையில் பள்ளி மாணவர்களால் தமிழ்ச்சோலை கீதம் பாடப்பட்டது. மாணவர்கள் மனனம் செய்து இசைக்கேற்ப நன்றாகப்பாடினார்கள். தொடர்ந்த வரவேற்புரை மாணவி செர்மிளா அவர்கள் நிகழ்த்தினார். நடன ஆசிரியை திருமதி. சுகுணாவதி மனோகர் அவர்களின் மாணவிகளின் வரவேற்பு நடனம் அனைவரையும் வரவேற்றது.
ஆசிரியை திருமதி. கிறேஸ் செல்வரட்ணம் அவர்களின் நெறியாள்கையில் பாலர் அபிநயப்பாடல் புத்திமான் பலவான் நாடகம் பழங்களின் முக்கியத்துவத்தைக்கூறும் இன்சுவைக்கனிகள் நிகழ்வு இடம்பெற்றது. ஆசிரியை திருமதி. யோகாம்பிகை நாகேஸ்வரன் அவர்களின் தமிழ்ப்பள்ளி நாடகம் மாணவர்களின் ஒற்றுமைத்தன்மையை வெளிப்படுத்தியது.
ஆசிரியை திருமதி. பவளமலர் சிவசுந்தரராசா அவர்களின் வழிப்படுத்தலில் கவியரங்கம் அனைவரையும் கவர்ந்தது.கவிதைகளை மாணவர்கள் மனனம் செய்து வெளிப்படுத்தியது சிறந்த விடயமாகும்.அதனோடு தேவலோகத்தில் அற்புதங்கள் நாடகம் மூலம் திருவள்ளுவர்-வாசுகி பாரதியார்-செல்லம்மா இராவணன்-மண்டோதரி ஒளவையார் அனைவரையுமே வரவைத்து வியக்கவைத்தார்கள்.
நிர்வாகி திருமதி. வசந்தி சுரேஸ் அவர்களின் நெறியாள்கையில்பல எழுச்சி நடனங்கள் மேடையேறி அனைவரையும் வியப்பூட்டின. மெய்சிலிர்க்கவைத்தன தாயக உணர்வைத்தட்டியெழுப்பின.ஆசிரியை திருமதி. நிசாந்தினி பரமேஸ்வரன் அவர்களின் படைப்பான தாளலயம் வேலைக்குநேரமாச்சு மேடை ஏறியது.தமிழரின் பாரம்பரிய களைவடிவங்களில் ஒன்றான தாளலயம் பிரெஞ்சு மொழி கலந்துஇசையோடு சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்கள்.
ஆங்கில ஆசிரியை திருமதி. செல்வநர்மதா அமுதன் அவர்களின்தயாரிப்பில் இழு பிரிவுகளாக ஆங்கில அபிநயப்பாடல் இடம்பெற்றது. நடன ஆசிரியையின் மாணவர்களால் பல நடன நிகழ்வுகள் அனைவரையும் கவர்ந்தன. புலம்பெயர் தேசங்களில் தமிழ்மொழிக்கல்வி எனும் தலைப்பில் நேர்காணல் இடம்பெற்றது. ஆசிரியர் திரு. த. பரமேஸ்வரன் அவர்கள் நெறியாள்கை செய்திருந்தார்.
இந்நிகழ்வில் திடீரென ஒளவையும் அதியமான் மன்னனும் தோன்றியது அனைவரையும் வியப்பூட்டின. இருவரும் பிரான்சில் தற்போது கல்வி நிலை எவ்வாறு உள்ளது என்பதை கூறி புலம்பெயர் உறவுகள் ஒற்றமையோடு வாழ்ந்து தமிழைவளர்க்கவேண்டும் என எடுத்துரைத்துச்சென்றார்கள். இந்த கற்பனை கலந்த படைப்பு எல்லேரையும் சிந்திக்கத்தூண்டியது.
அதே ஆசிரியரின் மற்றையபடைப்பான அவலம் நாடகம் நாட்டுக்காக உயிர்நீத்த ஒரு போராளியின் உண்மைச்சம்பவத்தை வெளிப்படுத்தயதோடு அனைவரையும் கலங்க வைத்தது.
நிகழ்வுகளின் இடையே ஆசிரியர்களையும் நிர்வாகியையும் கல்வி மேம்பாட்டுப்பேரவையைச்சேர்ந்த திருமதி. வியயா செல்வநாயகம் அவர்கள் கௌரவித்தார். பழைய மாணவர்களால் பள்ளி விவரணப்படம் வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சென் டெனி மாநகரசபை துணை முதல்வர் திருமதி. செசில் ரஙகின் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து நூல் வெளியீடு செய்யப்பட்டது. பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு. பரமலிங்கம் அவர்கள் வெளியிட்டு வைக்க பிரான்ஸ் தமிழ்ச்சோலைத்தலமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. யெயக்குமாரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து ஏனைய தமிழ்ச்சங்கத்தலைவர்கள் நிர்வாகிகள் நலன் விரும்பிகள் பெற்றுக்கொண்டனர். திருக்குறள்த்திறன் போட்டி தமிழ்த்திறன் போட்டி மாவீரர் நாள் ஓவியப்போட்டி மற்றும் அனைத்துலகப்பொதுத்தேர்வுகளில் சித்தியடைந்தோர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைத்துநிகழ்வுகளையும் ஆசிரியர் திரு.த.பரமேஸ்வரன் அவர்களோடு இணைந்து மாணவர்கள் நியித் நிலாயி ஆகியோர் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கினார்கள்.
நிர்வாகி அவர்களின் நன்றியுரை இடம்பெற்றது. இறுதி நிகழ்வாக இருபத்து நான்கு மாணவ மாணவிகள் இணைந்து வல்வெட்டி வீரனே என்ற பாடலுக்கு எழுச்சிநடனம் வழங்கியிருந்தார்கள்.இப்பாடல் எல்லோர் உணர்வுகளையும் தட்டி எழுப்பியது. தமிழ்த்தாய் வாழத்து மாணவர்களால் பாடப்பட்டது. இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் எல்லோராலும் பாடப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment