April 2, 2015

யாழில் காதலிக்க மறுத்த மாணவியின் வீடு புகுந்த ஆமி.!

அச்சுவேலி பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவரை புதிதாக இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர் ஒருவர் அண்மைக்காலமாக தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

அவரது காதலை பாடசாலை மாணவி ஏற்க மறுத்து வந்ததால் கடந்த செவ்வாய் கிழமை மாலை நேரம் மாணவியின் வீட்டுக்கு இரண்டு இராணுவத்தினருடன் குறித்த இளைஞரும் சிவில் உடையில் சென்று மாணவியின் தகப்பனாருடன் முரண்பட்டுள்ளார்கள்.
அவ்வேளை வீட்டுக்கு வந்த மாணவியின் மூத்த சகோதரன் தகப்பனாருடன் முரண்பட்டுக் கொண்டு இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.
அதனையடுத்து மூவரும் மாணவியின் சகோதரன் மீதும் தகப்பனார் மீது தாக்குதல் நடாத்தினார்கள். அதில் சகோதரன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.யாழ்போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் மாணவியின் வீட்டாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அதேவேளை தாக்குதல் மேற்கொண்ட மூவரும் தம் மீது மாணவியின் சகோதரனும் தகப்பனாரும் இணைந்து தாக்குதல் மேற்கொண்டதாக கூறி யாழ்.போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் மாணவியின் சகோதரன் மீதும் தகப்பனார் மீதும் தம் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என வைத்தியசாலை பொலிசாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்கள்

No comments:

Post a Comment