வனராஜா, காசல்ரீ நீர்தேக்கத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த தோட்ட தொழிலாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நேற்றுக் காலை 8.30 மணியளவில் ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்த பின், ஹற்றன்- நோட்டன் பிரதான வீதியை மறித்தும் வனராஜா சந்தியிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவு நேரங்களிலேயே கழிவுகளை வீசுவதாகவும் இவ்வாறு கழிவுகளை வீசுவதனால் சூழல் மாசடைகின்றதாகவும் தோட்ட தொழிலாளிகள் தொழிலில் ஈடுப்பட முடியாத சூழ்நிலையும் காணப்படுகின்றதாக ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தோட்டத் தொழிலாளிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு கழிவுகளை யார் கொட்டுவது என தெரியவில்லை என தோட்ட தொழிலாளிகள் தெரிவித்தனர்.
அத்தோடு பயணம் செய்யும் பயணிகளும் பெரும் சிரமங்களுக்குள்ளாகின்றமை சுட்டிக்காட்டதக்க விடயமாகும்.
இதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரிவித்தும் அவர்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குற்றம்சுமத்தினர்.
எனினும் சம்பவ இடத்திற்கு வந்த ஹற்றன் பொலிஸாரின் தலையீட்டின் பின் ஆர்ப்பாட்டகாரா்கள் கலைந்து சென்றனர்.










No comments:
Post a Comment