April 9, 2015

வலி-வடக்கில் உள்ள சில காணிகளைப் பார்வையிட இராணுவம் அனுமதி! ( வீடியோ இணைப்பு)

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகளில் ஒருதொகுதியை எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட அரச அதிபர் மற்றும் அதிகாரிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


இன்று காலை யாழ். செயலகத்தில் நடைபெற்ற காணி மீளளிப்பு தொடர்பிலான கலந்துரையாடலின்போதே, மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வலி.வடக்கில் மயிலிட்டி வடக்கு(ஜே-246), தையிட்டி தெற்கு(ஜே-250), வீமன்காமம் வடக்கு(ஜே-236), வீமன்காமம் தெற்கு(ஜே-237), காங்கேசன்துறை தெற்கு(ஜே-235), மயிலணி-(ஜே-240), கட்டுவன்-(ஜே-238), வறுத்தலைவிளான்-(ஜே-241) ஆகிய எட்டுக் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக சுமார் 567 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளது.

இதன்போது இந்தப் பகுதியில் புதைக்கப்பட்ட மிதிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டமைக்கான சான்றிதழையும் இராணுவத்தினர் கலந்துரையாடலின்போது சமர்ப்பித்தனர்.

எனவே எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த காணிகளை பார்வையிட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment