April 9, 2015

பிரித்தானியாவில் அதிரடி சோதனைகள்! இலங்கையர் உட்பட பலர் கைது.!

பிரித்தானியாவில் நுழைவிசைவு காலாவதியான பின்னர், அல்லது நுழைவிசைவு இல்லாமல், சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களைக் கண்டுபிடிக்க, இலங்கை, இந்திய, சீன உணவகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், கார் கழுவும் இடங்களில் தினமும், சோதனைகள் நடத்தப்படுகின்றன.


இத்தகைய இடங்களிலேயே சட்டவிரோத குடியேற்ற வாசிகள் அதிகளவில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதால், இந்த இடங்களில் சோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

நுழைவிசைவு இல்லாத சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு வேலை வாய்ப்பு அளித்த இலங்கை, இந்திய, பாகிஸ்தானிய உணவகங்களிடம் இருந்து, 1 மில்லியன் பவுண்ட்சுக்கும் அதிகமான தொகையையும், சீன உணவகங்களிடம் இருந்து 5 இலட்சம் பவுண்ட்சுக்கும் அதிகமான தொகையையும் குற்ற்றப்பணமாக அறிவிட்டுள்ளதாக. பிரித்தானிய உள்துறைச் செயலகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் சட்டவிரோதமாகப் பணியாற்றியதாக கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில், இரண்டிப்பாக அதிகரித்துள்ளதாக பிந்திய புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

2010ம் ஆண்டில், 7920 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்ட நிலையில், 2013ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை, 15,098 ஆக அதிகரித்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment