எவருமே திரும்பிப்பார்க்காத எங்கள் கிராமத்திற்கு வரவிருக்கும் தார் பாதையும் விவசாய முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளப்படும்அயல்கிராம பண்டார குளப்புனரமைப்பு வேலைத்திட்டங்களும் இனி எமது கிராமங்கள் பின்தங்கியவை என்ற அடையாளத்தை மாற்றும் என்று பழம்பாசி கிராம மக்கள் நெகிழ்ந்துள்ளனர்.
கடந்த 2015-04-12 அன்று வடமாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன் மற்றும் லிங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்ட மக்கள் சந்திப்பொன்றிலேயே மக்கள் பிரதிநிதிகள் மேற்படி கருத்துக்களை முன்வைத்ததோடு கிராமத்தில் காணப்படும் பல்வேறு குறைகள் தொடர்பிலும் கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட பழம்பாசி கிராமத்தின் சமூக அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 2015-04-12 அன்று வடமாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன் மற்றும் லிங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்ட குறைகேள் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.
மேற்படி நிகழ்வை பழம்பாசி கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகி திரு.குமாரசாமி கெங்கைநாதன் அவர்கள் தலைமை தாங்கியதோடு கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் சிலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வை தலைமை தாங்கி உரையாற்றிய கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகி அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அயல்கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பண்டாரகுளத்திற்கு வருகை தந்து பற்றைகள் நிறைந்த பாதையூடு பண்டார குளத்தை பார்வையிட்டதையும் அதனை தொடர்ந்து அக்குள புனரமைப்பு தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தற்போது அக்குளத்துக்கான புனரமைப்பு வேலைகளை முன்னெடுப்பதற்கான வழிகளை ஏற்படுத்திக்கொடுத்தமைக்கும் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.
மேலும் பாதை சீர்கேடு தொடர்பில் தம் கிராமமக்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 2014-03-03 அன்று வடமாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன் மற்றும் லிங்கநாதன் இருவரும் வந்து பாதைகளை கண்காணித்து இன்று எவருமே திரும்பிப்பார்க்காத இக்கிராமத்தில் தார் பாதையை கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுத்தமையிட்டு கிராம மக்கள் சார்பாக மகிழ்ச்சியையும் நன்றிகளையும் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து கருத்துக்களை முன்வைத்த கமக்கார அமைப்பினர் பழம்பாசி கிராமத்துக்குட்பட்ட இருகுளங்களை ஆழப்படுத்துவது தொடர்பிலும் மேய்ச்சல் தரை ஒதுக்கீடு தொடர்பிலும் பாடசாலை விளையாட்டு மைதானம் மற்றும் கவனிக்கவேண்டிய ஏனைய முக்கிய வீதிகள் மின்சார இணைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் தொடர்பிலும் தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இச்சந்திப்பில் கருத்துதெரிவித்த வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 615 கிராமங்களில் வாழும் அனைத்து மக்களும் எதிர்நோக்கும் வாழ்வியல் பிரச்சினைகளை இயலுமான வரையில் தீர்த்து சுமூகமான வாழ்வியலை கட்டியெழுப்பவேண்டியதே இங்கு இலக்காகிறது. கிராமத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அமைப்புகள் என்ற வகையில் உங்கள் கிராமம் சார்ந்த பிரச்சினைகளை முன்வைப்பதும் அவை தொடர்பில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்வதும் அவசியமாகிறது.
அலைகல்லு போட்ட குளத்தை அன்று பார்வையிட்ட பின்னர் பல ஏக்கர் வயல்நிலங்களும் விவசாயிகளும் பயன்பெறுவர் என்ற விபரங்கள் உரிய அமைச்சுகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
அதே போன்றே மாமடு பழம்பாசி வீதியையும் இக்கிராமமக்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 2014-03-03 அன்று பார்வையிட்டு அவை தொடர்பில் மாகாணசபையில் கதைத்து உரிய நிதி ஒதுக்கீட்டை ஏற்படுத்த முடிந்திருக்கிறது.
அதே போன்றே மாமடு பழம்பாசி வீதியையும் இக்கிராமமக்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 2014-03-03 அன்று பார்வையிட்டு அவை தொடர்பில் மாகாணசபையில் கதைத்து உரிய நிதி ஒதுக்கீட்டை ஏற்படுத்த முடிந்திருக்கிறது.
கிராமங்களில் உள்ள அமைப்புகள் ஒவ்வொன்றும் வினைத்திறனாக செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் அக்கிராமத்தின் கட்டமைப்புகளை இன்னும் வலுப்படுத்தும். தொடர்ந்தும் கிராமங்கள் சார்ந்த கோரிக்கைகளையும் திட்டங்களையும் எங்களிடம் முன்வையுங்கள். எல்லோரும் இணைந்து செயற்படுவதலே கிராமத்தின், தேசத்தின் வளச்சியை உறுதிசெய்யும் என்றார்.
No comments:
Post a Comment