April 9, 2015

சிங்கபூரில் நடைபெற்ற இரகசியக் கூட்டத்தின் உண்மைத்தன்மையும் நோக்கங்களும் என்ன?

சுவிஸ் அரசாங்கத்தாலும் In Transformation Initiative ஆலும் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட "Dialogue on promoting reconciliation and strengthening of democracy in Sri Lanka" என்றழைக்கப்படும் நிகழ்ச்சியில் பங்குபற்றியதாக கூறப்பட்ட தமிழர் பிரதிநிதித்துவம்இ தமிழர்களுக்கு ஆச்சரியத்தை தருகின்றது.


14 நாடுகளிலுள்ள மக்களவைகளின் கூட்டமைப்பாக இயங்கி வரும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர அமைதி கிடைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்தவகையில் தமிழர் தரப்பின் உண்மையான பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டமை, இந்த நிகழ்ச்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இரகசியமாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியால் தமிழர்களின் உண்மையான பிரச்சனைகளும் அவர்களின் நீண்டகால வேணவாக்களும் நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாவே உள்ளது. தமிழர் தரப்பின் முக்கியமான பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் பங்காளிகளாக்கப்படாதமை தமிழருக்கு பயனளிக்கப் போவதில்லை.
களத்தில் காத்திரமான மாற்றங்கள் ஏற்படாத நிலையிலும் இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தமிழர் தமது உண்மையான வேணவாக்களை கூறமுடியாத சூழ்நிலையிலும் அமைதிக்கான முன்னெடுப்புகளின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளில் தமிழரின் உண்மையான பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டமை இதனை மேலும் சீர்கெடச் செய்துள்ளது.

No comments:

Post a Comment