April 9, 2015

வவுனியா சிதம்பரபுரம் முகாமில் நிலமற்றவர்களாக அடிப்படை வசதிகளற்ற நிலையில் மக்கள்! (படம் இணைப்பு)!

வவுனியா � சிதம்பரபுரம் பகுதியில் குடியேற்றப்பட்டுள்ள
மக்கள் நிலமற்றவர்களாகவும் முகாம்களுக்குள் முடக்கப்பட்டவர்களாகவும் வாழ்நாளைக் கழிக்கின்றனர்.

வீடு திரும்புவோம் என்ற ஏக்கத்தில் பல வருடங்களாகக் காத்திருக்கின்றனர்.

வடக்கில் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வெளியேற்றப்பட்ட மக்களில் ஒருசாரார் மீள்குடியேற்றப்பட்டுள்ள போதிலும் ஏனையோரின் நிலை மாறுபட்டது.

வவுனியாவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக 1990 ஆம் ஆண்டு வவுனியா ஆசிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் சிதம்பரபுரம் முகாம் அமைக்கப்பட்டது.

இந்த முகாமில் பல வருடங்களாக சுமார் 150 குடும்பங்கள் காணியற்றவர்களாகத் தங்கியுள்ளனர்.

சொந்த நிலத்தில் சொந்த வீடுகளில் வாழ்ந்த மக்கள் இன்று காணியற்றவர்களாக, தகரக் கொட்டகைக்குள் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

அடிப்படை வசதிகளற்ற நிலையில் தற்காலிகக் கூடாரங்களில் இன்னல்படும் இந்த மக்கள் தொடர்பில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பாராமுகமாக செயற்படுவது கவலைக்குரியதே.

சிதம்பரபுரம் மக்களும் நாட்டின் குடிகள் என்ற அந்தஸ்த்தை தேர்தல் காலங்களில் மாத்திரம் நினைவில்கொள்ளும் அரசியல்வாதிகள் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் முன்வர வேண்டுமல்லவா?

No comments:

Post a Comment