April 9, 2015

படுகொலைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் அறிக்கை – சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் புறக்கணிப்பு!!

மோதல்கள் இடம்பெறும் பல நாடுகளில் படுகொலைகளில் இருந்து பாதுகாப்பு பெறுதல் சம்பந்தமான அறிக்கை ஒன்று ஐக்கிய நாடுகளினால் வெளியிடப்படது.

ஐக்கிய நாடுகளுக்கான ஜேர்மனிய தூதரகத்தால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இதில் பல்வேறு நாடுகளில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்தும், இந்த கொலைகளில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஆனால் சிறிலங்காவில் இனப்படுகொலை இடம்பெற்ற போதும், ஐக்கிய நாடுகள் சபை அந்த கொலைகளை தடுக்க தவறியிருந்தது.

அத்துடன் சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் குறித்து விவாதிப்பதற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கு பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கின்ற மூன்று நாடுகள் காரணமாக அமைந்தன.

இவ்வாறான விடயங்கள் குறித்து இந்த அறிக்கையில் ஒருவார்த்தையேனும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கவில்லை என்று இன்னர் சிட்டி பிரஸ் இணையத்தளம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 10 இடங்களில் சிறிலங்காவின் பெயர் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதும், தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் குறித்து திட்டவட்டமாக எதனையும் கூறி இருக்கவில்லை.

இது ஏமாற்றமளிக்கின்ற விடயம் என்று மற்றுமொரு சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment